புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!
இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!
இஸ்ரேலின் ‘இடதுசாரிகள்’ படுதோல்வி அடைந்துள்ளனர். 1968 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி (Israeli Labor Party — “HaAvoda”) வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் - கார்ப்பரேட்டுகளும் தான்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காது” என்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது
கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !
மத்திய கிழக்கில் உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கிய சிரியாவை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன.
என்ன நடக்கிறது சிரியாவில் ?
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியே நிலவக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, போர் வெறியோடு அலையும் ஏகதிபத்தியங்களின் கரங்களில் சிரியா சிக்கி தவித்து வருகிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் : உணவிலும் முரண்படும் மத்திய கிழக்கு ! ஆவணப்படம்
தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். அல்ஜசீராவின் ஆவணப்படம்.
பாலஸ்தீனியர்களை நரபலி கொடுத்து திறக்கப்பட்ட ஜெருசலேம் அமெரிக்கத் தூதரகம் !
ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல, காசாவில் வெசல் ஷேக் கலீல் போன்ற 60க்கும் மேற்பட்டோரின் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நேரத்தில்தான், அமெரிக்கா தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் திறந்து வைத்தது..
எட்டாவது ஆண்டில் சிரிய உள்நாட்டுப் போரின் அவலம் – படங்கள்
சிரியாவின் உள்நாட்டு போரில் இதுவரை 4,65,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை புலம் பெயர்ந்துள்ளனர். இன்னும் அங்கு போர் நிறைவடையவில்லை. இது போரின் எட்டாம் ஆண்டு தொடக்கம்.
சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்
சிரியாவில் நடப்பது என்ன? போரில் கொல்லப்படும் குழந்தைகள், பெண்கள், மக்களோடு போரின் உண்மைகளும் மறைக்கப்படுகின்றன என்கிறார் தோழர் கலையரசன்.
கொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை
ஏமனின் உள்கட்டமைப்பும் பொதுமக்களின் குடியிருப்புகளும் நொறுங்கி விட்டன. 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பணம், தண்ணீர், உணவு, மருந்துக்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியுறுகின்றனர். நார்வே அகதிகள் அமைப்பு எடுத்த இந்த பேரழிவின் காட்சிகள் சில இங்கே.
அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !
லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது. இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
யேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் !
ஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர்.
ஏமன் மீதான சவூதியின் தாக்குதல்கள் – இங்கிலாந்தின் இரட்டை வேடம் !
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல சவூதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்துவிட்டு மனிதாபிமானம் பேசுகிறது இங்கிலாந்து.
ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை !
புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன.