அமெரிக்க மாணவர்களின் போராட்டம்! இன அழிப்புக்கு எதிரான இன்னுமொரு ஒளிக்கீற்று!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தக் கோரியும் போராட்டப் பதாகைகளை ஏந்தியுள்ளனர்.
ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா – இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு
தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அது உலகத்தில் பல பகுதிகளில் போர்முனைகளை உருவாக்கி வருகிறது. அதன் ஓர் அங்கம்தான், இப்போது ஈரான் மீது போர்த்தொடுப்பதற்கான முயற்சியாகும்.
காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!
காசாவின் வடக்கு பகுதியிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களையும் புல்டோசர்களால் இடித்தும், மீண்டும் அங்கே வர இயலாதபடி தீ வைத்து எரித்தும் வருகிறது இஸ்ரேல் இராணுவம்.
காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!
பட்டினியை முடிவுக்கு கொண்டுவரவும், பஞ்சத்தின் அனைத்து அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான உதவிப் பொருட்கள் தடையின்றி நுழைவதற்கும் விநியோகிப்பதற்கும் இஸ்ரேலின் தடையை நீக்கவும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா
யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம்: ஹமாஸின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ள யூத இனவெறி இஸ்ரேல் அரசு!
நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, காசாவின் எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் வசித்துவரும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதும் குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, பாசிச இஸ்ரேல் அரசு.
இம்ரான்கானுக்கு சிறைத்தண்டனை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்ததுதான் குற்றமாம்!
தற்போது ஆட்சியில் இருக்கும் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான கும்பலும் அமெரிக்க அடிவருடியாக இருக்கும் வரை தான் ஆட்சியில் நீடிக்க முடியும்.
அக்டோபர் 7: தனது சொந்த மக்களையே படுகொலை செய்த இஸ்ரேல்!
போரட், “பெயேரியில் இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர்; ஹமாஸ் போராளிகளால் அல்ல” என்று கூறினார். இது குறித்த செய்தியை “தி எலக்ட்ரானிக் இன்டிபாடா” (The Electronic Intifada) வெளியிட்டது.
எல் நினோ: ஏழை மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பட்டினி அபாயம்!
சர்க்கரையின் விலை உயர்வால், ரொட்டி உற்பத்தியை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ள ரொட்டி விற்பனையாளர்கள், “இது மிகவும் மோசமான சூழ்நிலை” என்று வேதனை பெருமூச்சுவிடுகின்றனர். இதனால், அந்நாட்டு ஏழை, எளிய மக்கள் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கவிருக்கின்றனர்.
காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!
யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.
காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!
”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்"
பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.
காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால் பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.
பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!
இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம்.
இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!
இஸ்ரேலின் போலிப் பிரச்சாரக் குழு #HAMASisISIS மற்றும் #StandWithIsrael என்ற ஹேஷ்டேக்குகளுடன் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் கிம் கர்தாஷியன், மடோனா, கேல் கடோட், கேசி நீஸ்டாட் மற்றும் பல பிரபலங்கள் ஏற்கனவே இப்போலிப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.