எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !
"ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!" என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில் ஒரு மாலை நேரக் கருத்தரங்கை நடத்தியது. மாபெரும் கருத்தரங்கமென்றாலும் உள்ளே சுமார் 250 தலைகளே இருந்தன. ஓவியர் வீர.சந்தானம் தலைமை வகிக்க, புதுவை செயமூர்த்தி என்ன பிழை செய்தோமென்ற பாடலைப் பாட கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் கவிதை வாசிக்க கருத்தரங்கம் தொடங்கியது. யார் யார் என்ன தலைப்பில்...
ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
அன்பார்ந்த நண்பர்களே,
வினவின் அடுத்த கட்ட பயணமாக " புதிய ஜனநாயகம்" மார்க்சிய லெனினிய அரசியல் ஏட்டின் அனைத்துக் கட்டுரைகளையும் பி டி எஃப்பாகவும் (PDF), தமிழ் யூனிகோடிலும் இந்த மாதம் முதல் வெளியிடுகிறோம். இந்த சேவை புதிய ஜனநாயகம் வெளிவந்த அன்றே உங்களுக்கு கிடைக்கும். இதற்கு அனுமதியும், உதவியும் அளித்த புதிய ஜனநாயகம் தோழர்களுக்கு எமது நன்றிகள்.
சவால்கள், சபதங்கள், சவடால்கள் என்று ஒட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிகைகள் மத்தியில், அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து,...
ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும்.
நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம்...
அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !
தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது.
உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று....
புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன்,...
ராஜபக்சே கும்பலை போர்க் கிரிமினலாக அறிவிக்கக் கோரி ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது.
இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம்
துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!
புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன்...
ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
கிளிநொச்சியும், முல்லைத்தீவும் வீழ்ந்தாலும் இரத்த்தின் உழுவையில் பதம்பார்க்கப்பட்ட ஈழத்து மண் விரைவில் தன் தவப்புதல்வர்களை பிரசவிக்கும்.
ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்
தமிழகத்தின் அரசியல்வாதிகளில் சந்தர்ப்பவாதத்திலும், பிழைப்புவாதத்திலும், காரியவாதத்திலும், பச்சோந்தித்தனத்திலும், பொறுக்கித்தின்பதிலும் கொட்டை போட்டவர் ராமதாஸ். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இந்த வாதங்களில் ராமதாசை மிஞ்சமுடியாது என்றாலும் அது மிகையல்ல.
தனது குடும்பத்தினர் அரசியலுக்கும் கட்சிப் பதவிகளுக்கும் வரமாட்டார்கள் என்றும் அப்படி வந்தால் தன்னை முச்சந்தியில் செருப்பால் அடிக்கலாம் என்று சவடால் அடித்தவர், தமிழனுக்கு மறதி அதிகமென்பதாலும், நினைவு வந்தாலும் அடிக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையாலும் தனது மகன் சின்னய்யா அன்புமணியை வாரிசாக்கி கேபினட் அமைச்சராக்கியும், தமிழோசை நாளிதழ், மக்கள் டி.வி...
ஈழம்-இந்தியா-தேர்தல் புறக்கணிப்பு !
ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால்தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.
வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். ‘வல்லரசாக’ வளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி...
ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!
முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார்.
கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர்...
ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்!
ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு...
ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம்
ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! – படங்கள்
இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன.
இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை,...