ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்
"எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை" என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.
ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!
ஈழத்திற்கு எதிராக ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது.
ஈழம்…நேபாளம். தொடர்கிறது இந்தியாவின் மேலாதிக்க வெறி!
நேபாள பிரதமர் தோழர் பிரசண்டா ராஜினாமா செய்திருக்கிறார். நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வாலை பதவி நீக்கம் செய்து பிரசண்டா பிறப்பித்த உத்தரவை நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் நிராகரித்ததற்கான
ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! – ம.க.இ.கவின் மே தினப் பேரணி – புகைப்படங்கள் !
ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி
கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…
படம் நன்றி : நான் 1084
ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே
சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா
சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி!
பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே
புறப்பட்டு வந்தடி குதம்பாய்....
அந்தச் செருப்புக்கு நன்றியடி!
சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட
சிதம்பரம் மூஞ்சிக்கு
சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு
தேர்தல் ஒரு கேடாடி!
செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா
தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி
தங்கபாலுதான் மிரட்டுறாண்டி!
இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு
பாத்து வீசுங்கடி குதம்பாய்.... ஈழத்து
செருப்பையும் சேத்துக்கடி!
ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம்
வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த
வரலாறை கூறுங்கடி!
பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே
இந்திராகாந்திதாண்டி குதம்பாய்....
இந்திராகாந்திதாண்டி - பின்னே...
கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)
ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன.
குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப்...
கருத்துப்படம் : சிதம்பரத்துக்கு செருப்படி மற்றவர்களுக்கு ???
போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதாவின் பொன் முழக்கம் வரலாற்றில் இடம் பெற்றது போல இந்திரா காந்தி கொலையான 1984 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த சீக்கிய இனப் படுகொலையைப் பற்றி '' ஒரு ஆலமரம் விழுந்தால் பூமியில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் '' என்று நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியின் திமிரும் வரலாற்றில் பதிவாக்கியிருக்கிறது. அந்தக் கலவரத்தில் டெல்லியில் உள்ள சீக்கிய மக்கள் காங்கிரசுக் கும்பல்களால் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள்.
இதுநாள் வரை அந்தக் கலவரத்திற்கு காரணமான பெரும்பான்மையான நபர்கள், தலைவர்கள்...
ஈழமும் இந்திய தேர்தலும் – என்ன செய்ய வேண்டும் ?
சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.
இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.
நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்.
இந்தத் தேர்தலில் வாக்களித்தால்...
ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ – தமிழருவி மணியன் !
ஜூனியர் விகடன் ஏப்ரல் 5 இதழில் தமிழருவி மணியன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இது அவரது ஒப்புதலோடும், ஜூனியர் விகடனுக்கு நன்றி தெரிவித்தும் இங்கு வெளியிடப்படுகிறது.
இந்திய அரசியலின் இழிநிலை : ஆ.விகடனில் தோழர் மருதையன் !
இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம், ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு, மாற்று திட்டம், திராவிட அரசியலின் சீரழிவு, ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை, ரசிய-சீன பின்னடைவு, நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி.
ஈழம்: எதிரி – துரோகிகளுக்கெதிரான கருத்துப்படங்களின் போர் !
ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள்...
சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!
பிரச்சினைதான் முடிந்து விட்டதே. வழக்குரைஞர்கள் நீதிமன்றம் திரும்பி விட்டார்களே, பின்னர் ஏன் இந்தப் பொதுக்கூட்டம்?
உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!
போலீசின் காட்டாட்சிக்கு எதிரான வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் ! கருத்துப்படங்கள், முழக்கங்கள் !
-பிப்ரவரி 19, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இன்று சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கில் வக்கீல்கள் வருகிறார்கள் என்பதால் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பஞ்சுமிட்டாய் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பேருக்கு இரண்டு போலீசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்களைத் தாக்கிய போலீசு மீது புகார் கொடுத்தும் இன்று வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை என்பதற்காக எந்த...
தேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !
Subramanian Swamy expressed gratitude to the CPI (M), for condemning the incident of some miscreants throwing eggs at him in the Madras High court last month. Dr. Swamy in a letter to the state secretary N.Varadarajan said: please be assured that this support of your party will be remembered by me and reciprocated.
The Hindu, March 11, 2009
பெரியவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்...
ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !
பிரபல ஓவியரான மருது வினவு தளத்திற்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியத்தை இங்கே பதிவு செய்கிறோம். அவர் புதிய கலாச்சாரம், மற்றும் ம.க.இ.க அரசியல் இயக்கங்களுக்காக பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்த ஓவியத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு ஈழமும் இந்திய தமிழக அரசியல்வாதிகளும். ஓவியர் மருதின் தூரிகையில் தீட்டப்படும் ஓவியங்கள் வினவில் தொடர்ந்து இடம்பெறும்.
ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் ஈழம் குறித்து பல ஓவியர்கள் வரைந்த கூட்டு நிகழ்வில் அவர் தீட்டிய ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்தப் படத்திற்கு விளக்கம் தேவையில்லை....