Wednesday, April 16, 2025
Will never forget Palestine கடந்த சில நாட்களாக அச்சமும் பதட்டமும் மாறி மாறி வந்தென்னை வாட்டுகின்றன. காலை எழுந்த உடனே பிணங்களும் குண்டுகளும் இடிபாடுகளில் இரையைத் தேடும் அவலமும் கண்ணில் படக் கூடாதென நினைக்கிறேன். செய்திகளைப் பார்க்க பிடிக்கவில்லை அழுத்தி அழுத்தி ரிமோட் பட்டன்கள் பழுதாகிவிடும் போல; ஆனாலும் இறுதியில் செய்திச்சேனலையே பார்க்கிறேன். பார்ப்போரிடம் எல்லாம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவநம்பிக்கை என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்கிறது. இனி ஏதும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் என்னை...
உலகின் செவிகளுக்கு நாங்கள் உணர்த்த விரும்புவது எங்கள் மரண ஓலத்தை அல்ல.. விடுதலை முழக்கத்தை!
கருப்புப் பணத்தை ஒழிக்கிறேனு சொல்லிபுட்டு கடுகு டப்பா, பருப்பு டப்பாள சேர்த்து வைத்த காசை எல்லாம் களவாடி போயிட்டு கருப்புப் பணத்தை மட்டும் கடைசி வரை ஒழிக்காததை நாங்க இன்னும் மறக்கல! செத்துப்போன காசை எடுத்துக்கிட்டு போன வழியிலேயே சுருண்டு விழுந்து மாண்டு போன எங்க கதையெல்லாம் நாங்க இன்னும் மறக்கல! கொரோனா காலத்துல ஒரு வேளை சோத்துக்கு கையேந்தி நாங்கள் நிற்கையில அதானி, அம்பானி மட்டும் சொத்து சேர்த்து உலக பணக்கார...
குளிர்ந்த மேகமழை பொழியும் எங்க தேசத்துல, பாஸ்பரஸ் குண்டுமழை பொழியுது. வானை எட்டும் மருத்துவக் கட்டடங்கள் இப்போ, ஊனமுற்று ஒடைஞ்சி கெடக்குது. அன்பு வெள்ளம் வழியும் எங்க  தெருக்களில், ரத்தம் பெருக்கெடுத்து வழியுது. காரு போகும் சாலையில பாசிச இசுரேலின், பீரங்கி டேங்கர்கள் வலம்வருது‌. தங்க  வீடு  இல்லேன்னு கூடாரத்துல குடிபுகுந்தா, குண்டு வந்து மேலவுழுது. பிஞ்சு கொழந்தைங்க ஒடம்பயெல்லாம் வெடிமருந்து கந்தகமோ, பிச்சு தனியே எடுக்குது. தெற்கு  காசா  வீதிகளில் எங்களின் அழுகுரலாய், மரண ஓலம் கேட்குது. ஒருவேளை சோத்துப் பொட்டலத்த கண்ணால பாக்குறதே பெரிய...
ஆறு ஆண்டுகள் ஆயினும் ஆரா ரணமாய் ஆர்ப்பரிக்கிறது தூத்துக்குடி துப்பாக்கி சூடு… நீர் வெப்பத்தில் ஆவியாகி மேகத்தை முட்டி மண்ணில் மழையென பொழிந்து வீரத்தின் விதைகளாய் மண்ணில் புதைந்து “போராடு” எனும் உரத்தினை ஊட்டிச் சென்ற நாள்!!! 30 ஆண்டுகால புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க மலடாய் மாறிவிட்ட மண்ணினை மீட்டெடுக்க, தாகம் தணிக்கும் தண்ணீரை விஷமாக்கிய ஸ்டெர்லைட் எனும் கொலைகார கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராகப் போராடி 15 உயிர்களின் குருதி கொடுத்து தங்களின் அடுத்த சந்ததியினரின் இன்னுயிர் காத்த தூத்துக்குடி மக்களின் வீரம்...
ஹிட்லரின் நாஜிசம் வீழ்த்தப்பட்டது.. இரண்டு கோடி மக்களின் உயிர்த் தியாகத்தால்! முசோலினி பாசிசம் முறியடிக்கப்பட்டது.. மக்கள் போராட்டத்தால்! மீண்டும் முளைக்கிறது பாசிசம்.. பாசிசப் பாம்புகள் ஊர்ந்த தடங்கள் அழிக்கப்படாதவரை.. மூலதனத்தில் முளைத்த பாசிசத்தின் வேர் தேடி அறுத்தெறியப்படாதவரை.. சனாதனத்தின் சங்கைப் பிடித்து அதன் உயிர்மூச்சை நிறுத்தாதவரை.‌. பாசிசம் வளர கொடை கொடுத்த சக்கரவர்த்திகளின் கருவூலங்கள் கைப்பற்றப்படாதவரை.. காலுடைந்த ஜனநாயக ஏணியின் மீதேறி.. மீண்டும் நுழையும் பாசிசப் பாம்பு! இதோ! பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதம் கண்டெடுக்கப்படுகிறது.. போராட்டக் களத்தில்! மக்கள் போராட்டங்களே பாசிச இருள் கிழிக்கும் தீப்பந்தங்கள்..! எரியும்...
எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன் கால்கள் களைத்து இரைந்து கேட்கிறது ஓய்வை.. உழைக்க ஓடிய கால்களும் ஓடியாடி விளையாடிய கால்களும் உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன.. அப்பாவின் அப்பா இறந்து போனதை அவரின் கால்தழும்புகள்தான் அடையாளம் காட்டின.. அப்பா அடிக்கடி சொல்லுவார் வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை நாடில்லா வாழ்க்கை நரகம் என்று... எப்போதும் அவர் உடலில் எதையாவது கிறுக்கியபடி இருப்பார் ஏனென்று கேட்டால் குண்டடிப்பட்டு இறந்து போனால் அடையாளமற்ற பிணமாக...
ஆயிரக்கணக்கான ஆண்களோ அடித்தே கொல்லப்பட்டார்கள்! ஆடைகள் அவிழ்த்து துப்பாக்கி ரவைகளை மண்டைக்குள் புதைத்தது இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு!
ஓநாயென ஊளையிட்டு வந்த ரயில் முந்நூறு மைல்கள் கடந்து வந்த உடல்களைச் சிதைத்தப் போது முடிவுக்கு வந்தது எங்கள் முடிவுறாப் பயணம்...!
சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல, சாளர கம்பிகளுக்குப்பின் இருந்துக்கொண்டு விடுதலைக்கான சுவாசக்காற்றினை ஒருபோதும் சுவாசிக்க முடியாது என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம் போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.
மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ, தொழில் என்னாச்சி எனக் கேட்டால், “எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள். மானம் மறைக்க கோவணம் கட்டியவனின் கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!
போதும், போதும், போதும், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை வாழ்வதற்கு இடமும்மில்லை வாருங்கள் தோழரே
கல்குவாரிகளுக்குள் புதைக்கப்படும் அப்பாவி உழைப்பாளி மக்கள்! கந்தகத் துகள்களுக்குள் சிதறிய உடல்களை பார்க்கும் குடும்ப உறவுகளின் கண்ணீரும், கதறல்களும் தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன. அரசு அதிகாரிகளும், கல்குவாரி முதலாளிகளும் இணைந்து அடிக்கும் கொட்டமும் நீண்டு கொண்டுத்தான் இருக்கிறது. முதலாளிகள் சொத்துகள் சேர்த்து உடல் வளர்க்க, அற்ப கூலிக்காக உடல் சிதறி அப்பாவி உழைக்கும் மக்கள் மட்டும் மாண்டு போவது என்ன நீதி? வெடித்த சத்தம் பல மைல் தொலைவில் இருக்கும் ஊர் மக்களின் காதில்...
கோடான கோடி தாய்களுக்கு மகனாய், சகோதரர்களுக்கு சகோதரனாய், மாணவர் படையின் தலைவனாய், இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்.. நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தோழனே!!
வடக்கில் பிறந்த அவனையும், தெற்கில் பிறந்த என்னையும் ஏனோ இணைக்கிறது இந்த இரக்கமில்லா இரு தண்டவாளங்கள். இந்த தண்டவாளத்தில் பயணிக்கும் ஒரு ரயிலில், இரு வேறு வர்க்கங்களாய் பயணம் நீள்கிறது. பணம் இருப்பவனுக்கு குளிர்சாதன அறையில் உயர் ரக உணவுகளுடன் உறக்கம் நீள்கிறது மற்றொரு பெட்டியோ ஆட்டையும், மாட்டையும் அடைத்து சந்தையில் விற்க கூட்டிச்செல்வது போல நிரம்பி வலியும் மக்கள் கூட்டத்தில் நிற்கக்கூட இடம் இல்லாமல் நிற்கதியாய் பயணிக்கும் ஒர் மனிதக் கூட்டம் அவசரத்திற்க்கு மூத்திரம் வந்தாலும் அடக்கித் தான்...

அண்மை பதிவுகள்