Wednesday, April 23, 2025
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
திணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே, வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன. இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில் எந்தத் திசை என்று தெரியாமல் கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.
கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !
1950'களின் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை
புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்... கோஷமிடுதல் ஒத்து வராது... கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!
கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...
தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது...
கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே! கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்...
பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக் கொலை செய்பவனே... நினைவஞ்சலி செலுத்துவதும், புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே மலர்வளையம் வைப்பதும், இறந்தவர்களுக்கல்ல
நீதிக்கும் நமக்கும் நெடுந்தூரம் - ஆயினும் சாதிக்கும் வெறியோடு வெகுதூரம் பறந்த சாதிக்கே! அசன் அலி போல் ஜொலிப்பாயென நினைத்திருக்க, வயல் எலிபோல் மருண்டாய்... சுருண்டாய்!
மெளனத்தை உடை.உயிர்த்தெழு, மர உதடு திற,பேசு ! பூமியின் புன்னகையை மீட்டுத் தரும் வேட்கையோடு.. முன்முளைத்த மரபுகளை முறித்தெறியும் வேகத்தோடு பேசு !
உங்கள் கனவு என்னாயிற்று என்றேன். தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது என்பது போல கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்....
கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின் நிழல் பரப்பும், வண்ணப் பூச்சுக்கள் இல்லை. துரோகமும், லாபவெறியும் போபால் வீதிகளில் வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
இந்தியாவில் நீதிமன்றம் மட்டும் சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று யாராவது நம்பினால்...? அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!
இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர்.

அண்மை பதிவுகள்