Wednesday, April 16, 2025
வடக்கில் பிறந்த அவனையும், தெற்கில் பிறந்த என்னையும் ஏனோ இணைக்கிறது இந்த இரக்கமில்லா இரு தண்டவாளங்கள். இந்த தண்டவாளத்தில் பயணிக்கும் ஒரு ரயிலில், இரு வேறு வர்க்கங்களாய் பயணம் நீள்கிறது. பணம் இருப்பவனுக்கு குளிர்சாதன அறையில் உயர் ரக உணவுகளுடன் உறக்கம் நீள்கிறது மற்றொரு பெட்டியோ ஆட்டையும், மாட்டையும் அடைத்து சந்தையில் விற்க கூட்டிச்செல்வது போல நிரம்பி வலியும் மக்கள் கூட்டத்தில் நிற்கக்கூட இடம் இல்லாமல் நிற்கதியாய் பயணிக்கும் ஒர் மனிதக் கூட்டம் அவசரத்திற்க்கு மூத்திரம் வந்தாலும் அடக்கித் தான்...
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்! காலையில போனவள மாலையில காணலையே! கரிக்கட்டைய பார்த்து கலங்கி நானும் போனேனே! காலையில போய் வாரேன்னு சொல்லிவிட்டு போனா.... போனவ வரலையே பொழுதும் கூட போகலையே... ஒரு நாள் லீவு போட்டிருந்தா ஒரு மாதம் வாழ்ந்திருப்பா... ஓடாய் தேஞ்சு உழைச்சவ இன்னைக்கு ஓலையில கெடக்குறா.... இறந்தவன் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கிறான்... இறக்கிற தேதிய எங்களுக்கும் குறிக்கிறான்.... முதலாளிகளின் அடியாளாய் அரசுதான் இருக்குது... எங்களோட வேர்வையில்தான் உங்க பொழப்பே நடக்குது... உங்களிடம்...
RIP ராமா !!! சீதைக்கு, காலை சமையலுக்கு காய்கறி வாங்க காசு இல்லை. 1200 கொடுத்து வாங்கின சிலிண்டரும் நேற்று இரவே தீர்ந்து போக.. நீர் தண்ணி வடிச்சு லவனுக்கும் குசனுக்கும் ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுத்தா, சீதா. எப்போதுமே குடிச்சிட்டு தெருவுல விழுந்து கிடக்கும் ராமனுக்கு, இன்றைக்கு குடிக்க காசு இல்லை. வாங்கி கொடுக்க ஆளும் இல்ல. வீட்டு குண்டாவை திருடி விற்று குடித்துவிட்டு வந்து சீதையை தரந்தாழ்ந்து பேசினான்...
காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்... ஆம் தோழர்களே காதல்தான் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது... நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி தவிக்கும் காதலை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. எது காதல் ஆண் பெண் மீதும் பெண் ஆண் மீதும் கொள்வது மட்டுமா காதல்.. விதவிதமான ஆடைகளையும் நகைகளையும் வாங்கி கொடுப்பது காதலா, அது இல்லை தோழர்களே, அடுத்த மனிதனின் நலனுக்காக உரிமைக்காக...
அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் இதோ இப்போது வந்திருப்பது அயோத்தியின் இராமன் அல்ல  இது இராமன் 2.0 இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து பெருமிதம் கொண்டான் இலக்குவன் இந்த இராமனுக்காக கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை அறுத்து வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள் விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார் 2.0 இராமன் அசுவமேத யாகத்தில்...
(சாதியக் கொடூரங்களால் பாதிப்புக்குள்ளான ஒரு மாணவனுக்கும் - ஒரு கம்யூனிஸ்ட் தோழருக்குமான உரையாடலே, இந்தக் கவிதை) என்ன செய்ய? நான்! என்ன செய்ய? என்ன செய்ய? நான்! என்ன செய்ய? குடிக்கிற தண்ணித் தொட்டியில, மலத்தக் கலக்குறான் – என்ன செய்ய? படிக்கிற மாணவன் மூஞ்சியிலே, மூத்திரத்த அடிக்குறான்–என்ன செய்ய? சாதிப்பெருமையை பேசிக்கிட்டு மகளோட, கழுத்தையே அறுக்கிறான் – என்ன செய்ய? காட்டுசுள்ளிப் பொருக்கபோனா கம்பியில, கரண்ட வைக்கிறான்...
புத்தாண்டே வருக! புரட்சியின் நாயகரைத் தருக! புதியதொரு ஆண்டு மட்டும் பிறக்கப் போவதில்லை புதியதொரு வாழ்வும் பிறக்கப் போகிறது பாசிச அடக்கு முறைகள் பிறக்கும் இதே ஆண்டில் தான் விடுதலைக்கான கொடியும் பறக்கப் போகிறது இதோ இந்த பாராளுமன்றம்தான் நம் உரிமைகளைப் பறிக்கிறது என்ற முழங்கிய பகத்சிங்கின் வார்த்தைகள் காற்றில் கலந்து தொண்ணூற்றைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அடக்குமுறைகளும் கொடுஞ் சட்டங்களும் ஒரு போதும் விடுதலை உணர்வை சிதைக்க போவதில்லை இங்கே கோழைகளுக்கும் துரோகிகளுக்கும் கூட இடம்...
தீர்க்கப்படவேண்டிய வழக்கு! விளகாத இருளை கிழிக்க வீடுதோறும் ஊடுறுவும் சிமிளி விளக்கின் ஒளி இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை கிழக்கே தோன்றும் கதிரவனாய் கிராமம்தோறும் தோன்றி விடியலை மீட்டியது விவசாயிகளின் குழந்தையாய் கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி! தன் துடிப்பை நிறுத்தி துக்கத்தினை வெளிப்படுத்தி தொலைத்தூரம் வரை துவண்டே கிடந்தது தோழர்களே, அந்த துயர நாள் உங்களுக்கு தெரியுமா? கைப்பேசியில் கதைப்பேசி ஊர்கடக்கும் காரியமல்ல சொல்லில் சுருக்கிட முடியாத வரலாற்று சுவடு அது தன்மீது தினிக்கும் ஆண்டையின் உத்தரவை முடிக்க கண் சொருகும் நாளிகை நெருங்கிடும் உறை...
நூல்....! கருவறைக்குள் ஒரு சாதி கழிவு அள்ள ஒரு சாதி சாதிக்கொரு நீதியென்று நூல் வகுத்த நூல் அக்ரஹாரத்துக்கும் ஊருக்கும் ஊருக்கும் சேரிக்கும் எல்லைக் கோடு எழுதிய நூல் அப்போது தடை யாவரும் படிக்க இப்போது மந்திரங்கள் படித்தாலும் தந்திரமாய் தடைபோடும் நூல் ஏகலைவன் சம்பூகன் நந்தன் இப்போது நமக்குமென தகுதியெனும் நீட்டை நீட்டிய நூல் உண்மைகளைத் திருடி கதையென அளந்த நூல் கதைகளை எழுதி உண்மையென ஒப்பாரி வைக்கும் நூல் அதிகாரம் அகங்காரம் ஆதிக்கம் ஆணவத்திற்கு அரணாகி நிற்கும் நூல் எளிதில் அறுபடும் ஆனாலும் அந்நூலுக்கு அவ்வளவு அதிகாரமாம் நூலால் கட்டுண்டு நூலுக்கு கட்டுப்பட்டு...
திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர் தீவுபோல் மாறிய எங்கள் சென்னை; உடைமைகள் எங்களிடம் இல்லை உணவும் எங்களை தேடி வரவில்லை: மருந்துப் பொருட்களும் வரவில்லை மறுபடியும் அதிகாரிகள் வந்தால் கேட்போம் யாரால் எங்களுக்கு இந்த நிலை? அழையா விருந்தாளியாக பாம்புகளும் தேரைகளும் வீட்டிற்குள் வந்து இடம் கேட்கின்றன; வீடுகளை இழந்து வீதிகளில் நின்று கொண்டிருக்கிறோம் நேற்று பெய்த மழையில் எங்களின் குடிசைகளை காணோம்; கரை ஒதுங்கிய மீன்களைப் போல் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறோம்...
சுரங்கத்திற்குள் அமைதி! ஆன்மிக நகரங்களை இணைக்க மலையின் இடையே சுரங்கம் இதுதான் இந்துராஷ்டிர சதித்திட்டம்! சுரங்கத்தின் உள்ளே அமைதி சுற்றிலும் மண் புழுதி மூச்சுவிட முடியாமல் அவதி முடிந்தால் இவர்களுக்கும் அரசு தரும் இழப்பு நிதி பதினான்கு நாளாகியும் பலனில்லை நிலவிற்கு விண்கலம் அனுப்பும் உங்களின் விஞ்ஞானம் நிலத்தின் நடுவே உள்ளவர்களை மீட்கவில்லை இது யாருக்கான விஞ்ஞானம்? இரவு பகலாக வேலை பார்த்து இருட்டினில் இருதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருக்ககிறோம் இனியும் உயிருக்கு...
குஷ்புவும் செருப்பும் வந்தாரை எல்லாம் வாழ வைத்ததா சென்னை? இல்லை சேரிகள் தான் வாழ வைத்தன வைகையின் காவிரியின் தாமிரபரணியின் பெருமையை பேசுவோர்க்கு கூவத்தின் பண்பாடு அறிவது கடினமே சேரி என்றால் அன்பு அதை நீ சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை சாதி கேட்காத ஊர் சொர்க்கம் என்றால் சேரி தான் சொர்க்கம் சேரியின் அன்பும் அரவணைப்பும் அக்கிரகாரத்தில் தேடினாலும் கிடைக்காது துரத்தியடிக்கப்பட்டவர்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் மறு வீடு சேரிதான் கேட்டாலும் தண்ணீர் கொடுக்காத ஊரும் கேட்காமலே சோற்றை போடும் சேரியும் ஒன்றல்ல எப்போதும் ஒன்றல்ல அதனால்தான் ஊரும்...
விவசாய நிலத்தை யாருக்கு விலை பேச போகிறாய் ? விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்
போர்...! எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன் கால்கள் களைத்து இரைந்து கேட்கிறது ஓய்வை உழைக்க ஓடிய கால்களும் ஓடியாடி விளையாடிய கால்களும் உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன அப்பாவின் அப்பா இறந்து போனதை அவரின் கால்தழும்புகள் தான் அடையாளமாய் தெரியப்படுத்தின அப்பா அடிக்கடி சொல்லுவார் வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை நாடில்லா வாழ்க்கை நரகம் என்பார் எப்போதும் அவர் உடலில் எதையாவது கிறுக்கியபடி இருப்பார் ஏனென்று கேட்டால் குண்டுகளில் சிக்கி இறந்து போனால்...
உடம்பில் சிறுநீர் கழிக்கப்பட்ட சிறுவனிடமா? எதற்கு சண்டை என கேட்டதற்கே வெட்டு வாங்கியவனிடமா? உலக சாதனையில் ஒவ்வொரு சொட்டா எண்ணெய் சேகரித்தவர்களிடமா ? கோவில் கருவறையில் கொல்லப்பட்ட ஆசிபாவிடுமா? இல்லை ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற காசாவிடமா? எப்படி சொல்வது இவர்களிடம் "குழந்தைகள் தின வாழ்த்தை" பரியன் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அண்மை பதிவுகள்