Monday, April 28, 2025
ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள்.
"மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்" என்று அவர் (லெனின்) கூறினார், இது தான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. - மாக்சிம் கார்க்கி.
நீ போனவுடன், மிகவும் பயமடைந்தேன். சுற்றியிருக்கும் மலைக்குன்றுகள் அக்கொடிய இருளில் பயங்கர உருவங்களாய் மாறி என்னை விழுங்கிவிடுமோ என அதிர்ச்சியுற்றேன். அச்சத்தை வெல்ல மறுத்த என் கால்கள் ஆட ஆரம்பித்தன.
ஜனநாயகம் என்றால் என்ன, யார் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்பவர்களுக்கும், தரமான சமூக நகைச்சுவையை ரசிப்போருக்கும் பெர்னார்ட் ஷாவின் இந்த நாடகம் பிடிக்கும் என்று நம்புகிறோம். - வினவு
"நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்..."
இந்த பெந்தெகொஸ்தே சபைக்காரனுவ கிட்ட பளக்கம் விட்டா நம்மள கிறுக்காக்கி விட்ருவானுவ. நீ அவனுவ சொல்றானுவன்னி இதெல்லாம் நம்பிக்கிட்டு அலையாத..
"மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசிகிச்சு. ரத்தம் கசியிது கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்."
யாரோ ஒரு நீதிபதி ஒருத்தர் வெள்ளத்துல பாதிக்கப்பட்டு தனியா மாட்டிக்கிட்டாராம். மூணு நாள் பட்டினியில முனியாண்டி விலாஸ்ல போயி பசிக்கிதுன்னு சாப்பாடு கேட்டாராம்.
யூதர்களை மறைத்துவைப்பவர்களுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. மறைத்துவைக்கப்பட்ட ஒரு யூதனுக்காக, அந்த வீட்டில் உள்ள எல்லாரும் ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்படுவார்கள் என்பது உத்தரவு.
நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?
“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”
“தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்"
"அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி... கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம்.
"தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்."
"கண்ண மூடி கண்ணு தொறக்கறதுக்குள வந்து நிக்க நானென்ன காத்தா, கரண்டா? நானொன்னும் படுத்து கெடந்துட்டு வரல. இடுப்பொடிய வேல செஞ்சுட்டு வர்ரேன்"

அண்மை பதிவுகள்