இரண்டாண்டுகளாக நாறிக்கொண்டிருக்கிறது.. தி.மு.க-வின் ‘சமூகநீதி’!
31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை என்பதுதான் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்ட்’ என பீற்றிக்கொள்ளப்படும் தமிழ்நாடு போலீசின் யோக்கியதை.
சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு
பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
பகுத்தறிவு பகலவனின் பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்போம் | பெரியார் 51-வது நினைவு தினம்
பெரியார் 51-வது நினைவு தினம்
பகுத்தறிவு பகலவன், பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரை உயர்த்திப் பிடிப்போம்.
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid04NRU6kqAprKgCxM1CQENEERhw1JvHnqpSXHCF2saQz98zyC2sHzTFjREi65ycLmcl
https://www.instagram.com/p/DD8wTLXyuby/
https://www.instagram.com/p/DD86NVCyRff/
https://www.facebook.com/mohan.gandhi.10485/posts/pfbid02EMtdE8CHAVPBBH5Pn5HSgnSz1ydK4Bc14Toc57NjPFYydESuWER4Wo7WrNHfFn47l
https://www.facebook.com/vinavungal/posts/pfbid0B29qbpCFfgnqGp7Sqc4tTWQbPtd5xSYQCnusgkPUMdW1zsghzQmhkCszDsjL1NSsl
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02uqhWVTitHb86aRduZ42Nofex2DUSbNAqsDoN1HJWMoFemtdiVGut9yYdTcX579XNl&id=100087626633103
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp,...
கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? | மீள்பதிவு
தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். "சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்" என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார், முத்துராமலிங்கம்
தமிழ்நாட்டில் தொடரும் சாதி – தீண்டாமை கொடுமைகள்
நாங்குநேரி, மேல்பாதி, வேங்கைவயல் மற்றும் சமீப காலங்களில் நடந்த இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை இந்த மாநிலத்தில் மேல் விழுந்த சில "கருப்பு புள்ளிகள்" என்று ஒதுக்கிவிட முடியாது. இவற்றையெல்லாம் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வன்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்!
இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் அருந்ததியர் இளைஞர்களை தாக்கிய கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்
தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை
தனியார்மய ஆதிபராசக்தி பெற்றெடுத்த பங்காரு!
ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.
மதுரை : சாதித் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறும் அவலம்
ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.
மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!
சாதியை வைத்து மீண்டும் மக்களை பிளப்பதின் மூலம் தங்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிர கட்டமைப்பிற்குள் சூத்திர அடிமைகளையும் நவீன கார்ப்பரேட் அடிமைகளையும் உருவாக்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல்.
ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!
ரோகித் வெமுலா எதிர்கொண்டதை விட, இப்பொழுது பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஒடுக்குமுறைகள் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ள ரோகித் வெமுலவை நெஞ்சில் ஏந்துவோம். பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டி அமைப்போம்.
சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!
சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு - தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன.
சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !
“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.