Thursday, April 24, 2025
அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா?
இந்த விபத்துக்கு அடிப்படை காரணமும் இருட்டுதான். இந்த தொழிற்பேட்டையை பராமரிக்கும் பொறுப்பு AIEMA-க்கு தான்! அய்மாவின் தொடர்ச்சியான அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ!
"மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசிகிச்சு. ரத்தம் கசியிது கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்."
இதை பார்த்து என்னுடைய ஆட்களே(சக பார்ப்பனர்கள்) எங்களுக்கு தெரியாத எந்த மந்திரம்டா ஆண்டவனிடம் சொல்கிறாய் என்று நச்சரிக்கிறார்கள். அதெப்படி நான் சொல்லுவேன். அது அவருக்கும் நமக்கு இருக்கும் பந்தம். அவருடைய கருவி மட்டும்தான் நான்
மூடு டாஸ்மாக்கை என்று போராடியவர்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்”.
வாங்குன சம்பளம் சாப்பாட்டுக்கே போதல தம்பி, வேல முடிஞ்ச உடன ஒரு ஓட்டல்ல கூட மாட ஒத்தாச வேலைக்கு போனேன், அங்கனயே தங்கி, சாப்ட்டுகிட்டேன். தூங்க கூட நேரம் கெடைக்காது. மிச்சம் புடிச்சு மாசம் 500 ரூபாய்க்கு கொறயாம வீட்டுக்கு மணிஆர்டர் அனுப்புவேன்.
ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். "டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!" என்றார். ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.
நன்றாக படித்தவர்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று சம்பாதிக்கலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றும் சொர்க்கம் கிடையாது மாறாக சிறை தான்.
வெளியில யாரு காதுலையும் போட்டு வைக்காதீங்க. சும்மாவே போலீசுக்காரன் சீப்பு சீப்பா பழத்த எடுத்துட்டு போறான். அப்பறோம் நெலத்துல விளையிரதெல்லாம் கொண்டான்னு கேக்கப்போறான். நான் எங்குட்டு போறது
சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.
இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு இருக்கிற சற்றேறக்குறைய எட்டு இலட்சம் மாணவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.
சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை 2 வருசத்துல அடச்சுட்டு 2 வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க....! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்" எனக் கூறினார்.

அண்மை பதிவுகள்