சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு.
வயசாளியோ சீக்காளியோ வீட்ல பாத்தவன கண்ண மூடிகிட்டு கட்டிக்கணும். காதல் கீதல்னு வந்து நின்னு, சாதி சனத்துக்கு மத்தில மானத்த வாங்கிருவாங்கன்னு பொண்ணுங்கள வளக்குற மொறையே இறுக்கமா இருக்கும்.
"பாடமா நடத்துறாங்க, பிள்ளைங்களுக்கு ஒரு வாய்ப்பாடு தெரியல. க,ங,ச... தெரியல, மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்"
"இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்
"அதெல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காகத் தான் சார். நான் என்ன எந்த நேரமும் அரசியலா செய்யிறேன்? எப்பனா மாநாடு எலக்சன்னா வந்து தலையக் காட்டுவோம், பூத் ஏஜெண்டா ஒக்காருவோம். ஒரு திருப்தி. அவ்வளவு தான்".
சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.
யாருக்குத் தெரியும்....இது மாதிரியே பல தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், "we speak only English", என பெருமையாய் மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள், சிறிது யோசிக்க வாய்ப்புகளுண்டு.
தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.
பார்ப்பன இந்துமத பண்டாரங்கள் விபூதி, பூஜை பொருட்கள் என தலை விரித்தாடுவதைப் பார்க்கையில், இது புத்தகக் காட்சியா, இல்லை நடைபாதை கோயில்களா? என சந்தேகம் வராமல் இல்லை!
சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா?
அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கும், மேலே சொன்ன ஐஐடி விடுதியின் தரத்துக்கும், சூழலுக்கும் ஏன் இத்தனை வித்தியாசம்? எங்கே பிழை?
நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.
“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்"