பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
ஒரு முறைகேடான கட்டளையின் வழியாக மாநில அரசுகளின் உரிமை, மாநில பாடத்திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றுக்குக் குழிதோண்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.
யூரின் போற எடத்துல எட்டி எட்டி உதைக்கிறான் !
“இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய மணிப்பூர் பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம் என்கிறார்.
ஒரு அரசு பள்ளி மாணவரின் போராட்டம் – வீடியோ
இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார்.
JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ?
உண்மையில் காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கையாள முடியவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது?
திண்டிவனம் : தேர்தல் காலத்தில் மாணவர்கள் போராடக் கூடாதாம் !
"தேர்தல் நடத்தைவிதி வழிகாட்டுதலில் எங்களை கேட்காமல் எந்த சுவரொட்டியும் ஒட்டக் கூடாது. உடனே ஸ்டேசனுக்கு வா"
எது தேசத் துரோகம் ? தோழர் மருதையன் உரை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை!
JNU பெயரைத் தெரியுமா ? தோழர் கோவன் பாடல் !
எது தேசம்? எது துரோகம்? JNU மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பு.மா.இ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் பாடிய பாடல்கள்
நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
எந்தவிதப் பொது அறிவோ, அரசியல் அறிவோ, சமுதாய அறிவோ இல்லாத தார்மீக ஒழுக்கமற்ற, பண்பாடற்ற, சமூக மதிப்பீடற்ற வெத்துவேட்டு சினிமா நாயகர்களை (ஹீரோக்களை) சகலகலா வல்லவர்களாகச் சமூகத்தில் உலவ விடுவதே சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது வியாபார உத்தியாக உள்ளது.
JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை
நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை" என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.
நாங்கள் இந்தியரா ? – நாகா மாணவர் ஷிங்லாய் நேர்காணல்
நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
காட்ஸ் ஒப்பந்தம் :அரசுக் கல்வியை ஒழிக்கும் மோடி ! பாகம் – 2
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.
மோடி : ஊடக சந்தையில் விற்காத லேகியம்
ஜே.என்.யு விவகாரத்திற்கு பின்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீப காலமாக முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவு மோடி மற்றும் பாரதிய ஜனதா கும்பலை ஓரளவு விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகின்றன.
பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 3
"இதோ இந்தியப் புரட்சியாளன் தூக்கு மேடை ஏறும் இறுதி நிமிடங்களை காணும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து உள்ளது. எனது கால்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். கால்கள் துவண்டு போகாது. எனது கண்களை பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணீர் சிந்தாது. இன்குலாப் ஜிந்தாபாத்"
பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 2
தேசத் துரோகிகளாகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்கே அச்சுறுத்தலாகவும் உள்ள பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப் பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதை இல்லை
பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1
மோடி அரசின் தேசத்துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பகத்சிங் நினைவு நாளில் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக பிரச்சாரம் செய்யும் பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு அமைப்புகளின் செய்தித் தொகுப்பு - விருத்தாசலம், திண்டிவனம், ஓசூர் - கிருஷ்ணகிரி!