மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோவன் பாடல்கள் – வீடியோ
இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தோழர் கோவன் பாடிய பாடல்களின் தொகுப்பு.
அனிதாக்களுக்காக “நீட் தேர்வை” எதிர்ப்போம் !
"நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?", என்று கேட்டேன். " இல்லீங்க. போகலை". "அப்பா என்ன பண்றார்ம்மா?". " திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு". இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.
விருதை கொளஞ்சியப்பர் கல்லூரி முதலாமாண்டு மாணவருக்கு புமாஇமு வரவேற்பு !
மாணவர்கள் மத்தியில் பு.மா.இ.மு -வின் கொள்கைகள் மற்றும் போராட்ட அனுபவங்கள் விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை பு.மா.இ.மு -வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
புதிய மாணவன் பத்திரிகை சென்னை பல்கலையில் விற்பனை !
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்நாட்டில் மோடியை விமர்சித்து பத்திரிகை விற்பதற்கு கூட ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
கதிராமங்கலத்தில் போலீசின் அட்டூழியத்தை கண்டித்து மாணவர் போராட்டம்
''மாணவர்கள் களத்தில் இறங்கினால் தான் விவசாயத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும்'' என குடந்தை அரசு கலை கல்லூரி வழியில் தமிழகமெங்கும் போராட்டம் நடத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது புரட்சிகர மாணவ-இளைஞர் முன்னணி!
மெரினா நட்சத்திரங்களே வாருங்கள் ! காஞ்சிபுரம் கல்லூரியில் புமாஇமு வரவேற்பு
கல்லூரி மாணவர்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பு நிகழ்ச்சி என்பது நம்பிக்கையையும் உற்ச்சாகத்தையும் நாம் அமைப்பாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இல. கணேசனே வெளியேறு ! சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்
தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர்.
மாணவர்களே கல்லூரி வானில் ஒளிவீச வாருங்கள் !
கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரி இன்று திறக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களை வாழ்த்தி வரவேற்பதில் எமது பு.மா.இ.மு. அளவில்லா மகிழ்ச்சியடைகிறது.
நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !
உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து மூலம் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு, மருத்துவக் கல்வியைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனிச் சொத்தாக்கிவிட்டது.
கடலூர் திருத்துறையூரில் மதுக்கடையை மூடிய மாணவர்கள்
மக்கள் அதிகாரத்தின் துண்டு பிரசுரத்தாலும் மாணவர்களின் பிரச்சாரத்தாலும் உந்தப்பட்டு, எந்த கட்சிகளின் தலைமையும் வேண்டாம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என முடிவெடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர்.
அண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை !
மாணவ சமுதாயத்தின் நலனில் அக்கறையுள்ள நீதிபதியாக இருந்திருந்தால் துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கையெழுத்திடலாம் என்று இருக்கிறதா? என்று கேட்டிருக்க வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு
ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு. அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.
சாஸ்த்ரா – கல்விக் கூடமா ? ஆர்.எஸ்.எஸ்-ன் கொலைகார பயிற்சிக் கூடமா?
திருச்சி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது.
துணைவேந்தரை நியமனம் செய் ! அண்ணா பல்கலை முற்றுகைப் போராட்டம்
துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி, பேராசிரியர் வேலைக்கு 50 லட்சம், உதவி பேராசிரியர் வேலைக்கு 30 லட்சம். தகுதி, திறமை, பணி அனுபவம் எதுவும் தேவையில்லை, பணம் இருந்தால் பதவி. பல்கலைக் கழகங்களில் வரலாறு காணாத ஊழல் முறைகேடுகள் நடந்தது நாள் தோறும் அம்பலமாகி வருகின்றன.
துணைவேந்தரை உடனே போடு – அண்ணா பல்கலைக்கழக முற்றுகை !
அண்ணா பல்கலைக்கழகமும், சென்னை பல்கலைக்கழகமும் இந்த மே மாதத்தில் பட்டமளிப்புவிழா நடத்தவுள்ளனர். மாணவர்கள் அந்த பட்டங்களை வாங்கினாலும் துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் தரப்படும் பட்டமானது குப்பை காகிதத்திற்கு சமமானது.