Tuesday, April 22, 2025
ஆறு ஆண்டுகள் ஆயினும் ஆரா ரணமாய் ஆர்ப்பரிக்கிறது தூத்துக்குடி துப்பாக்கி சூடு… நீர் வெப்பத்தில் ஆவியாகி மேகத்தை முட்டி மண்ணில் மழையென பொழிந்து வீரத்தின் விதைகளாய் மண்ணில் புதைந்து “போராடு” எனும் உரத்தினை ஊட்டிச் சென்ற நாள்!!! 30 ஆண்டுகால புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க மலடாய் மாறிவிட்ட மண்ணினை மீட்டெடுக்க, தாகம் தணிக்கும் தண்ணீரை விஷமாக்கிய ஸ்டெர்லைட் எனும் கொலைகார கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராகப் போராடி 15 உயிர்களின் குருதி கொடுத்து தங்களின் அடுத்த சந்ததியினரின் இன்னுயிர் காத்த தூத்துக்குடி மக்களின் வீரம்...
ஹிட்லரின் நாஜிசம் வீழ்த்தப்பட்டது.. இரண்டு கோடி மக்களின் உயிர்த் தியாகத்தால்! முசோலினி பாசிசம் முறியடிக்கப்பட்டது.. மக்கள் போராட்டத்தால்! மீண்டும் முளைக்கிறது பாசிசம்.. பாசிசப் பாம்புகள் ஊர்ந்த தடங்கள் அழிக்கப்படாதவரை.. மூலதனத்தில் முளைத்த பாசிசத்தின் வேர் தேடி அறுத்தெறியப்படாதவரை.. சனாதனத்தின் சங்கைப் பிடித்து அதன் உயிர்மூச்சை நிறுத்தாதவரை.‌. பாசிசம் வளர கொடை கொடுத்த சக்கரவர்த்திகளின் கருவூலங்கள் கைப்பற்றப்படாதவரை.. காலுடைந்த ஜனநாயக ஏணியின் மீதேறி.. மீண்டும் நுழையும் பாசிசப் பாம்பு! இதோ! பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதம் கண்டெடுக்கப்படுகிறது.. போராட்டக் களத்தில்! மக்கள் போராட்டங்களே பாசிச இருள் கிழிக்கும் தீப்பந்தங்கள்..! எரியும்...
எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன் கால்கள் களைத்து இரைந்து கேட்கிறது ஓய்வை.. உழைக்க ஓடிய கால்களும் ஓடியாடி விளையாடிய கால்களும் உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன.. அப்பாவின் அப்பா இறந்து போனதை அவரின் கால்தழும்புகள்தான் அடையாளம் காட்டின.. அப்பா அடிக்கடி சொல்லுவார் வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை நாடில்லா வாழ்க்கை நரகம் என்று... எப்போதும் அவர் உடலில் எதையாவது கிறுக்கியபடி இருப்பார் ஏனென்று கேட்டால் குண்டடிப்பட்டு இறந்து போனால் அடையாளமற்ற பிணமாக...
ஆயிரக்கணக்கான ஆண்களோ அடித்தே கொல்லப்பட்டார்கள்! ஆடைகள் அவிழ்த்து துப்பாக்கி ரவைகளை மண்டைக்குள் புதைத்தது இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு!
ஓநாயென ஊளையிட்டு வந்த ரயில் முந்நூறு மைல்கள் கடந்து வந்த உடல்களைச் சிதைத்தப் போது முடிவுக்கு வந்தது எங்கள் முடிவுறாப் பயணம்...!
சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல, சாளர கம்பிகளுக்குப்பின் இருந்துக்கொண்டு விடுதலைக்கான சுவாசக்காற்றினை ஒருபோதும் சுவாசிக்க முடியாது என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம் போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.
மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ, தொழில் என்னாச்சி எனக் கேட்டால், “எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள். மானம் மறைக்க கோவணம் கட்டியவனின் கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!
கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில்  இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
போதும், போதும், போதும், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை வாழ்வதற்கு இடமும்மில்லை வாருங்கள் தோழரே
கல்குவாரிகளுக்குள் புதைக்கப்படும் அப்பாவி உழைப்பாளி மக்கள்! கந்தகத் துகள்களுக்குள் சிதறிய உடல்களை பார்க்கும் குடும்ப உறவுகளின் கண்ணீரும், கதறல்களும் தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன. அரசு அதிகாரிகளும், கல்குவாரி முதலாளிகளும் இணைந்து அடிக்கும் கொட்டமும் நீண்டு கொண்டுத்தான் இருக்கிறது. முதலாளிகள் சொத்துகள் சேர்த்து உடல் வளர்க்க, அற்ப கூலிக்காக உடல் சிதறி அப்பாவி உழைக்கும் மக்கள் மட்டும் மாண்டு போவது என்ன நீதி? வெடித்த சத்தம் பல மைல் தொலைவில் இருக்கும் ஊர் மக்களின் காதில்...
கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன
கோடான கோடி தாய்களுக்கு மகனாய், சகோதரர்களுக்கு சகோதரனாய், மாணவர் படையின் தலைவனாய், இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்.. நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தோழனே!!
ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு 'பாரத மாதாக்கள்' தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.
வடக்கில் பிறந்த அவனையும், தெற்கில் பிறந்த என்னையும் ஏனோ இணைக்கிறது இந்த இரக்கமில்லா இரு தண்டவாளங்கள். இந்த தண்டவாளத்தில் பயணிக்கும் ஒரு ரயிலில், இரு வேறு வர்க்கங்களாய் பயணம் நீள்கிறது. பணம் இருப்பவனுக்கு குளிர்சாதன அறையில் உயர் ரக உணவுகளுடன் உறக்கம் நீள்கிறது மற்றொரு பெட்டியோ ஆட்டையும், மாட்டையும் அடைத்து சந்தையில் விற்க கூட்டிச்செல்வது போல நிரம்பி வலியும் மக்கள் கூட்டத்தில் நிற்கக்கூட இடம் இல்லாமல் நிற்கதியாய் பயணிக்கும் ஒர் மனிதக் கூட்டம் அவசரத்திற்க்கு மூத்திரம் வந்தாலும் அடக்கித் தான்...
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்! காலையில போனவள மாலையில காணலையே! கரிக்கட்டைய பார்த்து கலங்கி நானும் போனேனே! காலையில போய் வாரேன்னு சொல்லிவிட்டு போனா.... போனவ வரலையே பொழுதும் கூட போகலையே... ஒரு நாள் லீவு போட்டிருந்தா ஒரு மாதம் வாழ்ந்திருப்பா... ஓடாய் தேஞ்சு உழைச்சவ இன்னைக்கு ஓலையில கெடக்குறா.... இறந்தவன் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கிறான்... இறக்கிற தேதிய எங்களுக்கும் குறிக்கிறான்.... முதலாளிகளின் அடியாளாய் அரசுதான் இருக்குது... எங்களோட வேர்வையில்தான் உங்க பொழப்பே நடக்குது... உங்களிடம்...

அண்மை பதிவுகள்