Saturday, April 19, 2025
போராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குவது தேச விரோதக் குற்றமா? தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம். – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கண்டன உரை.
வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் 11.06.2018 அன்று தோழர் காளியப்பன் பேசுகிறார்.
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் ஏப்ரல் - 2018 இதழில் வெளியான தலையங்கம்.
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர் ஜெ.அமலநாதன், பேராசிரியர் சி.சாந்தி, வழக்கறிஞர் சு.மில்டன், பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை.
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேரா. கருணானந்தன் மற்றும் பேரா. அ.சீனிவாசன் ஆகியோர் ஆற்றிய உரை...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார். இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல் நேரலை: https://www.facebook.com/vinavungal/videos/10156274704114336/
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் உறுதியான போராட்டம்தான் அரசை பீதியடையச் செய்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா, ஊடகவியலாளர் செந்தில், சினிமா கலைஞர் சீனு இராமசாமி.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் - ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி. (பாகம்-1)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் மரணமும் எவ்வளவு கொடூரமாக நிகழ்ந்தது என்பதையும், இக்கொடூரக் கொலைகளை நேரில் கண்ட சிறுவர்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதையும் விவரிக்கிறார், பத்திரிக்கையாளர் கலைச்செல்வன்.
நேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார், களத்தில் இருந்த தோழர் தங்கபாண்டியன்
வாழ்வுரிமைக்காகப் போராடியவர்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்கிறது இந்த அரசும் அதற்கு ஒத்தூதும் ஊடகங்களும். மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்ட பிணங்களைச் சாட்சியாய் வைத்துக்கொண்டு, தூத்துக்குடியெங்கும் எதிரொலிக்கும் மரண ஓலங்களுக்கு மத்தியில் எதிரொலிக்கும் இந்தக் குரல் யாருடையது?
தூத்துக்குடி இன்று, பாஞ்சாலக்குறிச்சி அன்று, இது மண்ணைக் காக்கும் போராட்டம், வெல்லும் தமிழகமே எழுந்து நின்று!
நீண்ட ஆயுள் பெற கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி. பாருங்கள் ! பகிருங்கள் !

அண்மை பதிவுகள்