Wednesday, April 16, 2025
ஒண்டிக்கு ஒண்டி வாறியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார்.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி மோசடி தொடங்கி, ஆண்டாள் விவகாரம், நீரவ் மோடி விவகாரம் வரை அனைத்து மோசடிகளும் ‘வைத்துச்’ செய்யப்பட்டிருக்கும் பகடி வீடியோ - பூணூல் ஜூம்லா- டீசர்
காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.
இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா? பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!
ஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்.
30 -ம் தேதி சமயத்திலாவது அரசு மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால் தத்தளித்துக் கொண்டிருந்த பல மீனவர்களை மீட்டிருக்கலாம். ஆனால் அரசு அதற்கு மறுநாள் தான் தேடுதல் பணியை ஆரம்பித்தது. கேடுகெட்ட மத்திய மாநில அரசுகள்.
குமரி மாவட்டம் பூத்துறை கிராமம், உள்ளிட்ட 8 கிராமங்கள் மிகவும் மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளன. அங்கிருந்து பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று திரும்பவில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரின் கதியும் என்னவெனத் தெரியாத நிலையில் திக்கற்று நிற்கிறார்கள் மக்கள்.
ஒகியின் தாண்டவம் குமரி மாவட்ட விவசாயத்தை நசுக்கி நசமாக்கி விட்டது. இன்னொரு பக்கம் அரபிக்கடலோரத்தை அண்டி வாழ்ந்த மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த போராட்டம் பற்றிய முழுமையான ஆவணப் படம்
சென்னை, தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் 02-12-2017 சனிக்கிழமை மாலை 5:மணியளவில் நடைபெறும் கருத்தரங்கத்தை நேரடியாக வினவு தளத்திலிருந்து (Youtube, Facebook) ஒளிபரப்பு செய்கின்றோம்.
ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும் பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.

அண்மை பதிவுகள்