Wednesday, April 16, 2025
Home ebooks Puthiya Jananayagam டெங்கு : ஒழிப்பது எப்படி?

டெங்கு : ஒழிப்பது எப்படி?

15.00

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2017 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பகோணம் மகாமகம் விழாவில், நெரிசலில் சிக்கி, மிதிபட்டு முப்பதுக்கும் மேற்பட்டோர் இறந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், அது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையின்றி, ஜெயாவும் அவரது தோழி சசிகலாவும் மகாமகக் குளத்து “ஜலத்தை” எடுத்து ஒருவர் தலையில் இன்னொருவர் ஊற்றிக்கொண்டு “புனித” நீராடினார்கள்.

அதே அக்கிரமம் எடப்பாடி அரசிலும் தொடர்கிறது. டெங்கு நோய் தாக்கி ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் வேளையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார் எடுபிடி எடப்பாடி. நிலவேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுப்பதைக்கூட, அமைச்சர்களை வரவழைத்து, சால்வை போர்த்தி வாழ்த்திப் பேசி, கட்சி விழாவாக நடத்துகிறார்கள், இந்த அருவெறுக்கத்தக்க பிறவிகள்.

13 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்