Wednesday, April 16, 2025
Home Books Puthiya Kalacharam மீடியாவை மிரட்டும் மோடி ! அச்சுநூல்

மீடியாவை மிரட்டும் மோடி ! அச்சுநூல்

30.00

புதிய கலாச்சாரம் அக்டோபர் 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.

Out of stock

Description

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என மதிக்கப்படும் பத்திரிகைத் துறை மோடி பாசிசத்தின் பிரச்சார பீரங்கியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை இம்மாத புதிய கலாச்சாரம் இதழ் ” மீடியாவை மிரட்டும் மோடி !” தொகுத்துள்ளது

மீடியாவை மிரட்டும் மோடி ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு!
  • இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?
  • மோடி அரசின் கூலிப்படையா பத்திரிகையாளர்கள் ?
  • 2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி
  • அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம்!
  • டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம்!
  • சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் இவர்கள் படுத்தேவிட்டார்கள்!
  • நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலைநீக்கமா? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள்!
  • உண்மையைப் பேசாதே! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசின் ஒடுக்குமுறை!
  • மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !
  • தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ?
  • அமித்ஷா சொத்து விவர நீக்கம் அறிவிக்கப்படாத அவசரநிலை!
  • செய்தியை ‘கவர்’ செய்ய ‘கவர்’ கொடுத்த ஒடிசா பாரதிய ஜனதா!
  • EPW : ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி – அதானி கூட்டணி!
  • குமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க-வா?
  • பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
  • கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்!

தமிழகத்தில் கூட அற்ப விசயங்களுக்காக பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் ரவுடி போல பேசுகின்றனர். முகவரியே இல்லாத தமிழக பா.ஜ.க. தலைவர்கள், காவி ஆதரவு சமூக ஆர்வலர்கள் அனைவரும் தமிழக ஊடகங்களால் கடந்த நான்காண்டுகளில் பிரபலமாக்கப்பட்டிருக்கிறார்கள். அர்னாப் கோஸ்வாமி போன்றோரோ சங்க பரிவாரத்தை எதிர்க்கும் எவரையும் தேசவிரோதி என பரபரப்பாக சித்தரிக்கின்றனர்.

எழுதும் கைகளை முறித்தால் உண்மைகள் பரவாது, பொய்கள் ஆட்சி செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் துணிபு! அதை முறியடிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்தத் தொகுப்பு!

பதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

Additional information

Weight 85 g
Dimensions 14 × 21 × 0.5 cm

You may also like…