Tuesday, April 15, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருத்தாசலம்: தஷ்ணாமூர்த்தியைக் கொன்ற தனியார் பள்ளி!

விருத்தாசலம்: தஷ்ணாமூர்த்தியைக் கொன்ற தனியார் பள்ளி!

-

விருத்தாசலம்-விடிஐ-கொலை

‘‘உள்ளுரில் இருந்து கொண்டே என்னை ஜெயிலில் தள்ளிட்டீங்க இல்ல” என்று தனது உறவினர் நண்பரிடம் பேசிய பேச்சுதான் தூக்கில் தொங்கிய தஷ்ணாமூர்த்தியின் கடைசி குரல் . . .

விருத்தாசலம் ஊரின் எல்லையில் ஆளரவம் இல்லாத பொட்டல் காட்டில் விருத்தகீரிஸ்வரர் எஜுகேஷனல் டிரஸ்ட் சுருக்கமாக வி.இ.டி என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி நடத்தப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்குதாரராக இருந்து நடத்தப்படும் சிறப்பு உடையது இந்தப் பள்ளி. மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் இவர்கள்தான் வகுப்பு எடுக்கிறார்கள்.

27-6-12 அதிகாலை 4 மணிக்கு தஷ்ணாமூர்த்தி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மின்விசிறியில் வகுப்பு அறையி்ல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் பார்த்து தகவல் சொல்லி பள்ளி நிர்வாகம் அரசு மருத்துவ மனையின் பிணவறையில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். வருடத்திற்கு 80,000 ரூபாய் பணம் கட்டினேன் என் புள்ளய சாகக் கொடுக்கவா? என மாணவனின் பெற்றோர் கதறிய காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.

பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தற்கொலை பற்றி விசாரித்த போது பள்ளி கூடத்தின் நெருக்குதல்தான் காரணம், இரண்டு நாளாகவே தஷ்ணாமூர்த்தி சரியாக சாப்பிடவில்லை, சரியாக படிக்கவில்லை என்று தெரிந்தது. பெற்றோரை வரச்சொல்லி டி.சி. வாங்கி செல் என பள்ளி நிர்வாகம் தஷ்ணாமூர்த்தியை துன்புறுத்தியதாக சொல்லுகிறார்கள். அதிகாலைமுதல் இரவு வரை படிக்க சொல்வதும் எந்த வசதியும் அற்ற அறையில் சிறைச்சாலையாக வகுப்பறையிலேயே மாணவர்களை அடைத்து வைப்பதும் போன்ற மன உளைச்சல்தான் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது.

தனியார்மயக்கல்வியின் கொடுமைக்கு 18 வயதுவரை பாசத்துடன் சீராட்டி வளர்த்த ஒரே மகனை பலிகொடுத்த தாயின் பெண்களின் கதறலை நம்மால் பார்க்கமுடியவில்லை. இரத்தம் கொதிக்கிறது.

உள்ளுரில் வசதியாக சுதந்திரமாக மகிழ்ச்சியாக நண்பர்களோடு பெற்றோர்களோடு வாழ்ந்த மாணவன் அதே ஊரில் 2 கி.மீ தூரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் கொடுமை, மார்க் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்க மாணவனின் விருப்பத்திற்கு மாறாக அதிகாலை முதல் இரவு வரை தனியார்பள்ளி முதலாளிகள், ஆசிரியர்கள், விடுதி காப்பாளர், என அனைவரும் தொடுத்த  துன்புறுத்தல்தான்  மரணத்திற்கு காரணம். தெரிந்தோ தெரியாமலோ பெற்றோர்கள் சம்மதத்துடன் தஷ்ணாமூர்த்தியின் தற்கொலை நடந்துள்ளது என்பதை அன்று பள்ளிக்கு வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.

வி.இ.டி.பள்ளி முதலாளிகள் மிகுந்த செல்வாக்கு உடையவர்கள். பள்ளி தாளாளர் அ.தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர். பங்குதாரர்களோ அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள். இறந்த மாணவன் தஷ்ணாமூர்த்தியின் பெரிய தந்தை பா.ம.க முன்னால் நகர்மன்ற தலைவர். தந்தையோ நகராட்சியில் பெரும் ஒப்பந்ததாரர். மருத்துவமனையில் தாயாரும் உறவினர்களும் கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் பள்ளியில் எந்த சலனமுமில்லை. விடுதி மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரியருக்காக 10-ம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் தேர்வு எழுத காத்திருந்து எழுதி சென்றனர். அனைத்து கட்சிகாரர்களும் வந்திருந்தனர். அமைதியாக இருந்தனர். மனித உரிமை பாதுகாப்பு மையமும் பெற்றோர் சங்கமும்,” தஷ்ணாமூர்த்தியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை கைது செய், அனுமதியின்றி நடத்தப்படும் பள்ளி விடுதியை இழுத்துமூடு” என முழக்கமிட்டவுடன் காவல் துறை ஆய்வாளர் சீராளன் பாய்ந்து வந்து.” பள்ளி கேட்டுக்கு வெளியே செல்லுங்கள், வளாகத்தின் உள்ளே சத்தம் போட கூடாது” என சட்டம் பேசினார்.

அதோடு சுற்றி நின்ற பெற்றோர்களை அப்புறப்படுத்த முயன்றார். “கல்வி துறையிடம் கோரிக்கை வைத்து போராடுகிறோம், உரிய அதிகாரிகள் வரும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடக்கும் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை, சட்டம் ஒழுங்கை மட்டும் கவனியுங்கள்” என பலர் முன்னிலையில் பேசியதும் போலீசு ஒதுங்கியது.மேலும் “கல்வி துறையே காவல் துறையே பள்ளி முதலாளிக்கு துணை போகாதே, பதில் சொல் பதில் சொல் தஷ்ணா மூர்த்தியின் மரணத்திற்கு பதில் சொல்!” என்ற கோபமான முழக்கம் போலீசாரை விரட்டியதோடு ஒதுங்கிய பெற்றோர்களை ஒருங்கிணைத்தது.

அரசு பள்ளியில் சம்பளம் வாங்கி தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய் என்ற முழக்கத்தால் ஒதுங்கி மறைவாக நின்றிருந்த பங்குதார ஆசிரியர்கள் ஓடிவிட்டனர். உறுதியான மக்களின் போராட்டம் மாலை 4-00 மணி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வரும் வரை நீடித்தது. சந்தேக மரணம் என வழக்கு போடாமல் தற்கொலைக்கு தூண்டியதாக விடுதி வார்டன் மற்றும் பள்ளி தாளாளர் முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராடிய பெற்றோர்களை சி.இ.ஓ. அறைக்கு பேச அழைத்ததை மறுத்து போராடும் இடத்திற்கு வரவழைத்து பேசினோம். ஏற்கனவே பெற்றோர் சங்கம் மூலம் கடந்த ஆண்டு விடுதி பற்றி புகார் அனுப்பினோம். நடவடிக்கை எடுத்திருந்தால் தஷ்ணாமூர்த்தியை காப்பாற்றியிருக்கலாம். விடுதியை மூட உத்திரவிட்டால் மட்டுமே இங்கிருந்து கலைவோம் என அறிவிக்கவே பள்ளிக்கு மட்டுமே இயக்குனர் அலுவலகம் அங்கீகாரம் தருகிறார்கள். விடுதிக்கு அனுமதி யாரும் கொடுப்பதில்லை அதனால் மூடுவதும் சாத்தியமில்லை.யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்றார். இங்கு நடக்கும் தவறுகளை இயக்குநருக்கு பரிந்துரைகளாக அனுப்புவோம் அந்த அதிகாரம் மட்டுமே எனக்கு உள்ளது என்றார்.

இப்படி ஒருமாணவனை அநியாயமாக இழந்துள்ளோம். இரவு வரை வகுப்பு நடத்தி மாணவனை கொன்று விட்டார்கள். காரணமான பள்ளி விடுதி மீது என்ன நடவடிக்கை எடுக்கபோகீறிர்கள், எதற்காக வந்தீர்கள் என பெற்றோர்களும் சங்க நிர்வாகிகளும் கோபமாக கேள்வி கேட்டனா். அதன் பிறகு மனித உரிமை பாது காப்பு மைய வழக்கறிஞர்கள் சட்டம் பேச வேண்டாம், மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மனசாட்சி உள்ள மனிதனாக கல்வி துறை அதிகாரியாக  மாணவர்கள் தங்கும் விடுதி அறையை பாருங்கள், உரிய நடவடிக்கை எடுங்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கைகளை கட்டி போட்டுள்ளதை நாங்கள் அறிவோம் என்றனர்.

வகுப்பறைதான் இரவில் படுக்கும் அறை. ஒரு அறைக்கு 50 மாணவர்கள் வரை தங்க வைக்க படுகின்றனர். பெட்டி பாய் அங்கேயே வைத்துக்கொள்ள வேண்டும். கழிப்பறையோ நாலாந்தர சினிமா கொட்டகையைவிட மோசம். கடந்த ஆண்டு பல மாணவர்களுக்கு சொறி சிரங்கு தொற்று நோயால் பாதிக்கபட்டனர். மாணவர்கள் சாப்பிடும் இடமோ சிமெண்ட் மூட்டை அடுக்கிய குடோனில்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்காடு. கட்டிடங்களே இல்லை.படிப்பு என்று மாணவர்களை இடைவிடாது காலைமுதல் இரவு வரை துன்புறுத்துகின்றனர்.

அதிகாலை 4-00மணி முதல் இரவு 10-00 மணி வரை மாணவர்களுக்கு படிப்பு படிப்பு. . .பள்ளியின் தேர்ச்சி 100 சதம் ஆக்கி விளம்பரபடுத்தி முட்டாள் பெற்றோர்களை ஏமாற்றி போட்ட பணத்தை சீக்கிரம் எடுக்க வேண்டும். இதற்கு மாணவர்களை எந்த அளவிற்கு கொடுமை படுத்த முடியுமோ? அந்தளவிற்கு செய்யலாம். 9-ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து விட்டது என்பதற்காக இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு கட்டாய டி.சி.கொடுத்துளனர். அவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் கல்வி திறமையின் லட்சணம் இதுதான்.

உள்ளுர் மாணவனாக இருந்தாலும் கண்டிப்பாக விடுதியில் சேர்க்க வேண்டும்.கேட்கும் பணத்தை கொட்டி அழவேண்டும்.எதிர்த்து கேள்வி கேட்டால் டி.சி. வாங்கி செல்லுங்கள் என அதிகாரம் தூள் பறக்கும். கடந்த ஆண்டு ஒரு மாணவன் சரியாக படிக்க வில்லை என்பதற்காக அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பகுதி நேரமாக இப்பள்ளிக்கு வந்து பாடம் எடுத்தார். அப்போது ஒரு மாணவனை மொட்டை அடித்து துரத்தி விட்டார். அந்த பெற்றோர் இன்று நடந்த முற்றுகை போராட்டத்தில் ஆத்திரம் பொங்க பேசினார். சிறிது நேரத்தில் போலீசார் அவரை அழைத்து சென்று விட்டனர். விடுதி பற்றி பல புகார்களை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் உரிய கல்வி துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு விடுதியின் கொடுமை தாளாமல் 7 ம் வகுப்பு மாணவன் அதிகாலை வெளியே வந்த போது சமூக விரோதிகளால் கடத்தப்பட்டு திருச்சியில் மீட்கபட்டான். அடிப்படை வசதியற்ற பாதுகாப்பு அற்ற வி.இ.டி பள்ளி விடுதியை மூடு என பெற்றோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். காவல் துறையுடன் போராடி புகார்மனு மீது வழக்கு பதிவு செய்தோம். இது போன்ற கொடுமைகளை விவரங்களை முழுமையாக சி.இ.ஓ க்கு விளக்கிய பிறகு பள்ளி முழுவதும் அதிகாரிகளும் பெற்றோர் சங்க நிர்வாகிகளும் சுற்றி பார்த்தனா்.

கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என சி.இ.ஓ. உறுதியளித்தார். ஆனால் இப்போதே உத்திரவிடுங்கள், பத்திரிக்கையாளரிடம் அறிவியுங்கள் என வற்புறுத்தியதும் மாலை 5.30 மணிக்கு மேல் அனைத்து மாணவர்களும் இப்பள்ளி வளாகத்தை விட்டு சென்று விட உத்திரவிடுகிறேன். 24 மணிநேரத்திற்குள் வகுப்பறையில் இயங்கும் விடுதியை காலி செய்ய வேண்டும் எனவும் உத்திரவிடுகிறேன். விடுதியை தொடர்ந்து நடத்த கூடாது என உத்திரவிடுகிறேன். பள்ளியில் நடை பெற்ற முறைகேடுகள் தொடர்பாக இயக்குநர் மூலம் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கிறேன் என்று பத்திரிக்கையாளர்கள் முன்பாக அறிவிக்க வைத்தோம்.

பிறகு மாலை இறந்த மாணவனுக்கு வீட்டுக்கு சென்றோம் உறவினர்களும் ஊர்காரா்களும் உள்ள நெகிழ்ச்சியோடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகள் கையை பிடித்து கொண்டனர். நீங்கள் இல்லையென்றால் ஒன்றும் நடந்திருக்காது எந்த போராட்டமானாலும் கூப்பிடுங்கள் வருகிறோம் என உறுதியளித்தனர்.

படங்களை பார்க்க அதன் மீது அழுத்தவும்

___________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

  1. மாணவர்களே இந்த கேடு கெட்ட சமுதாயத்தில் பள்ளிப் படிப்பை படிக்கமுடியவிலை என்றால் ஒன்னும் குடிமுழுகிப் போய்விடாது. உங்களை நீங்களே மாய்த்துக்கொள்வதை விடுத்து எதிர்த்து போராடும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வெளியேறுங்கள். இது போன்ற அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எம் தோழர்களுடன் இணையுங்கள். அவர்கள் உங்களுக்குச் சொல்லித் தருவார்கள் இவ்வுலகின் முதன்மைத் தத்துவமான மார்க்சீயத்தையும் போராடும் பண்பை வளர்த்துக் கொள்வதைப் பற்றியும்.

    • தற்போது பள்ளி கல்வித்துறை இந்த பள்ளியின் விடுதியை சீல் வைத்து மூடியிருக்கிறார்கள். மேலும் அங்கீகாரம் இல்லாத இந்த விடுதியையும், அதை வைத்து கொள்ளையிட்டு வந்த பள்ளியையும் எதிர்த்து மனித உரிமை பாதுகப்பு மையம் ஏற்கனவே போராடியிருக்கிறது என்ற தகவலையும் தோழர்கள் தெரிவித்தார்கள்.

  2. மாணவர்களே இந்த கேடு கெட்ட சமுதாயத்தில் பள்ளிப் படிப்பை படிக்கமுடியவிலை என்றால் ஒன்னும் குடிமுழுகிப் போய்விடாது. உங்களை நீங்களே மாய்த்துக்கொள்வதை விடுத்து எதிர்த்து போராடும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வெளியேறுங்கள். இது போன்ற அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எம் தோழர்களுடன் இணையுங்கள். அவர்கள் உங்களுக்குச் சொல்லித் தருவார்கள் இவ்வுலகின் முதன்மைத் தத்துவமான மார்க்சீயத்தையும் போராடும் பண்பை வளர்த்துக் கொள்வதைப் பற்றியும்.

  3. முழுக்க முழுக்க பெட்றோர்கலின் தவருதான் இது ! ஆசை யாரை விட்டது. யேதோ அரசு பள்ளி ல படிச்சா உருப்படவவே மாட்டாங்கர மாதிரி !!!

    Me & most of my friends studied in stateboard schools that too we are not toppers, just average students.and now we are in good jobs earning more than enough money, many of us are in India/Aus/UK/US/Singapore etc… earning for us and also giving for the nation.

  4. வளர்ந்த நாடுகளில் தங்கள் மகனோ மகளோ டாக்டர் அல்லது எஞ்சினியர் என்பதில் எல்லாம் பெருமை அடைவது இல்லை விருப்பம் மற்றும் திறமை அடிப்படையில் கல்வியை தேர்ந்தெடுத்து பல துறைகளில் சாதனை செய்யும் அவர்களிடம் கூலி வேலைக்கு செல்வதில் இங்கே போட்டி அதற்கு மார்க் வாங்க மாணவர்களை துன்புறுத்தும் அடிமை கல்வி முறை.நாமே காசு கொடுத்து பிள்ளைகளை அடிமையாக பதிவு செய்ய வேண்டும்.இவர்களை பெரிய கண்டுபிடிப்பாளர்கள் ஆக்கும் கல்வியா கிடைக்கிறது? கிடைப்பது வெளிநாட்டு அறிவியலார்க்கு உதவியாளர் வேலை செய்யும் கல்விதான்.அப்புறம் அங்கே இருப்பவனுக்கு அவன் நாட்டுக்காரனை போல் மிமிக்ரி செய்றான் கால் சென்டரில்.அடுத்த தலைமுறையாவது தமக்கு விருப்பமான கல்வி கற்கட்டும்.

  5. முட்டாப் பசங்க…ஒரு சின்னப் பையன அனியாயமாக் கொண்னுட்டானுக…ஆரஞ்சுப்பழத்த ஜீஸ் மேக்கர்ல போட்டு நசுக்கின மாதிரி நசுக்கித்தான் பர்ஸ்ட் மார்க்கெடுக்கவைக்கனுமா…அப்படிச்செய்தால் தான் பர்ஸ்ட் மார்க் எடுக்க முடியுமா என்ன??

  6. மாணவர்களின் அறிவு வளர்ச்சியைவிட தங்கள் மார்க் ஃபேக்டரி பள்ளிகளின் தேர்வு விகிதமே முக்கியம் என்று பள்ளி மாணவர்களை கோழிப்பண்ணை கோழிகளை விட மோசமாக நடத்துகிறார்கள் என்று மக்கள் உணர்ந்து,

    அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த, தனியார்மயமாக்கப்படும் கல்வியை மீட்டு இளைய தலைமுறையை காப்பாற்ற அணி திரள வேண்டும்..

  7. இதில் பள்ளிக்கு எந்த அளவுக்கு பங்கு உள்ளதோ அதே அளவு பெற்றோர்களிடமும் உள்ளது. இந்த சம்பவம் மட்டும் இல்லை. பல்வேறு இடங்களிலும் இதே சூழல் உள்ளது. பரிட்சையில் தோல்வியுறும்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் இதனால் தான்.

    பெற்றோர்களே.. இப்படி ஒரு சம்பவம் நடந்தப்பின் எந்த போராட்டம் நடத்தினாலும் போன் உயிர் திரும்பாது. மேலும் சில முட்டாள் பெற்றோர்கள் தன் மகன்/மகள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளானாலும் பரவாயில்லை என்று இது போன்ற பள்ளிகளை ஆதரிப்பர். ஆகவே தயவு செய்து இது போன்ற பள்ளிகளை தவிர்ப்பதே சால சிறந்தது. மேலும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்று தயவு செய்து நீங்களும் எண்ணாதீர்கள், உங்கள் பிள்ளைகளுக்கும் உரைக்காதீர்கள். என் பள்ளி, கல்லூரியில் குறைவான மதிப்பெண் எடுத்தும் நல்ல நிலையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

    தங்கள் குழந்தைகளுக்கு தோல்வி பயத்தை அளிக்காமல், எந்த தோல்வி வந்தாலும் பயமின்றி எதிர்கொள்ள கற்றுக்கொடுங்கள்.

  8. மிகவும் வேதனையான சம்பவம்… 🙁

    வினவிற்கு ஒரு வேண்டுகோள். கடந்த வாரம் திருவண்ணமலையை சேர்ந்த ஒரு சமூக ஆர்வளர் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டார் என்று கேள்விபட்டேன். இதை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    வழக்கம் போல மீடியா இதற்கு எந்த முக்கியதுவமும் கொடுக்கவில்லை…

    இப்படி இருக்கும் சமுதாயம் எப்படி உருப்படும் 🙁

  9. ஒவுவொரு பள்ளிக்கும் மனித வுரிமை பாதுகாப்பு மையம் வேண்டும் போல .யப்படியல்லாம் கல்ல்வியை வர்த்தம் செய்றன்கப்பா ..
    தனியார் பள்ளிஎல் சேர்த்தால்தான் கவ்ரவம் என்று நினைக்கும் பெட்றோர் கல் அரசு பள்ளியில் சேருங்க பா ….

  10. மாணவ செல்வங்களுக்கு நீங்கள் இந்நாட்டின் கணிவலங்களில் நீங்களும் ஒரு வளம் .இதை மறந்து ஒவுஒருவரும் மரணிதுகொண்டல் இந்த நாட்டை பாதுகாப்பது யார் .இந்நாட்டின் வளங்களை சொரையாடும் முதலாளித்துவம் மாணவ செல்வத்தையும் சுரையடுது ..இனி நாம் ஒழிந்து போவதை விட கல்வி கொள்ளையர்களை ஒழிப்போம் …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க