தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் ! பாசிச அபாயத்தை முன்னுணர்ந்து முறியடிப்போம்!!
ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரோசா லுக்சம்பர்கும் கார்ல் லீப்னெக்டும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டையொட்டி, அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் ஆர்ப்பாட்டங்களைக் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்தி வருகின்றன.
முதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தளகர்த்தர்களாக இருவரும் செயல்பட்டு வந்ததால், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி அரசின் இராணுவத்தால் இவ்விருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
போலந்து நாட்டில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், தனது 15 வயதில் போலந்து பாட்டாளி வர்க்கக் கட்சியின் உறுப்பினரானார். கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதால், 18 வயதில் தலைமறைவாகி, ஸ்வீடன் நாட்டிற்குத் தப்பிச்சென்றார். ஜூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார். போலந்து மற்றும் லித்துவேனிய சமூக ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்தார். 28 வயதில் ஜெர்மனிக்கு வந்த லுக்சம்பர்க் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானார்.
கார்ல் லீப்னெக்ட், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான வில்ஹெல்ம் லீப்னெக்ட்டின் மகன். முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் (1914-இல்) ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் போர்ச் செலவுகளுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சக்கரவர்த்திக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், கட்சி உறுப்பினரான கார்ல் லீப்னெக்ட் மட்டும் அதற்கு எதிராக வாக்களித்தார்.
அதைத் தொடர்ந்து, ரோசா லுக்சம்பர்க்கும், லீப்னெக்ட்டும், கிளாரா ஜெட்கினுடன் இணைந்து சர்வதேசியவாதிகள் என்ற குழுவைத் தொடங்கினர். அதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்ததுடன், போர் எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர். இதுவே பின்னர் ஸ்பார்ட்டகஸ் குழு என்ற பெயரில் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுத்தது.
முதல் உலகப் போரின் முடிவில் ரஷ்யா மட்டுமல்ல, ஜெர்மனியும் புரட்சியின் விளிம்பில் இருந்தது. கீல் நகரில் 40,000 ஜெர்மன் கப்பல்படை மாலுமிகளும், இராணுவ வீரர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் புரட்சிகர அலை ஓங்கி அடித்தது. கீல், ஹம்பர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மனியின் சக்கரவர்த்தி நாட்டைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்.

இந்த மாபெரும் மக்கள் எழுச்சியின் பின்னால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் நிறுவனர்களான ரோசா லக்ங்ம்பர்க்கும், கார்ல் லீப்னெக்ட்டும் அப்புரட்சியின் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். அதே சமயம் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியோ, முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சியை நசுக்குவதற்கு வேலைசெய்தது. இதற்கென “ப்ரீடு கார்ப்ஸ்” என்ற பெயரில் முன்னாள் இராணுவத்தினரைக் கொண்ட ஒரு படை உருவாக்கப்பட்டது.
1919-ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க்கும், கார்ல் லீப்னெக்டும் ப்ரீடு கார்ப்ஸ் படையினரால் பெர்லினில் கைது செய்யப்பட்டனர். ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பிறகு ஜெர்மனியில் முன்னேறிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு சமூக ஜனநாயகவாதிகள் இழைத்த துரோகம், பின்னாளில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வர அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. லுக்சம்பர்க்-லீப்னெக்ட் படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் பின்னர் ஹிட்லரின் கூட்டாளிகளாக வலம் வந்தனர். புரட்சியாளர்களை ஒழிக்க சமூக ஜனநாயகவாதிகள் உருவாக்கிய ப்ரீடு கார்ப்ஸ் படைதான் பின்னாளில் ஹிட்லரின் கொலைப்படை எஸ்.எஸ். ஆக உருவெடுத்தது.
படிக்க:
♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்
♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !
இந்த ஜெர்மன் அனுபவத்தோடு இந்தியாவின் அனுபவத்தை ஒப்பிடும்போது ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்ப்பதாகக் கூறிவரும் காங்கிரசு உள்ளிட்ட மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும், போலி கம்யூனிசக் கட்சிகளும் மிதவாத நடைமுறையைக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டுதான், ஆர்.எஸ்.எஸ். இன்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னைச் சமரசமின்றி எதிர்த்துப் போராடத் துணிந்த கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட அறிவுத்துறையினரைப் படுகொலை செய்கிறது அல்லது சிறையில் தள்ளுகிறது.
இப்பாசிசக் கும்பலை தேர்தல்கள் மூலம் மிதவாத ஓட்டுக்கட்சிகளே முறியடித்துவிடுவார்கள் என இன்னமும் நாம் நம்பினோம் என்றால், ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தை எதிர்வரும் ஆண்டுகளில் எளிதாகவே நிறுவிவிடும்.
அழகு
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |