Friday, November 6, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by அய்யனார்

அய்யனார்

அய்யனார்
20 பதிவுகள் 0 மறுமொழிகள்

டெல்லி – சத்யா நிகேதன் விடுதிக் கட்டட விபத்து: போராடியவர்களைக் கொடூரமாகத் தாக்கிய பா.ஜ.க. அரசு!

0
போலீசாரால் போராட்டக்காரர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுயாதீனப் பத்திரிகையாளர் பக்சீஷும் ஒருவர். அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களின் செல்பேசிகள் பறிக்கப்பட்டு அதன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடுமையாகத் தாக்கப்பட்டு, மூன்று மணிநேரத்திற்குப் பின்னர் போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம் – திணிக்கப்பட்ட இடைத்தேர்தலா? தேர்தலே திணிக்கப்பட்டதா?

1
ஓட்டுப் போட்ட மக்களை எம்.எல்.ஏ-க்கள் ஏமாற்றியுள்ளார்கள், மக்களின் ‘ஓட்டுரிமை’யை மதிக்கவில்லை, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது எனும்போது இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அவ்வாறு செய்யாமல், அதே கேலிக்கூத்து அரங்கேற அனுமதிப்பதை எப்படிப் பார்ப்பது? அப்படியென்றால், ‘ஜனநாயகத்தின் கேலிக்கூத்து’ என்ற விமர்சனம் இடைத்தேர்தலை அனுமதித்த நீதிமன்றத்தின் அணுகுமுறைக்கும் பொருந்துமல்லவா...

மொதராத்திரி திரைவிமர்சனம்: சாதிவெறி – ஆணாதிக்கத்தை விமர்சனப்படுத்தும் ஊக்கமுள்ள படைப்பு

0
இன்றைய தலைமுறையை பிற்போக்குச் சிந்தனைகளுக்குப் பின்னால் அடிமைத்தனமாகச் செல்பவர்களாகக் காட்டாமல், அதை மீறும் தன்மையை இயல்பில் கொண்டவர்களாகக் காட்டுகிறார் இயக்குநர். திருமண நிகழ்வின் ஊடாக, ஆதிக்கச் சாதி இளம்பெண்ணுக்கும் பட்டியல் இன இளைஞனுக்கும் இடையேயான ஒரு காதலும், அந்த இளைஞனின் சுயமரியாதைக்கான போராட்டக் குணமும் இயல்பாகக் காட்டப்படுகிறது.

த.வெ.க. அரசின் அலட்சியத்தால் பறிபோன 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள்

0
“வழக்கு விசாரணையின் மிக முக்கியக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை” என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய விசயத்தை தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! | மீள்பதிவு

0
பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது.

காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!

0
இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.

தண்டகாரண்யம் – எழுப்பும் கேள்விகளும், எழுப்பப்பட வேண்டிய விவாதங்களும்

1
கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

மோடி அரசின் E20 திட்டம்: கேள்விக்குறியாகும் உணவுப் பாதுகாப்பு

0
தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

நேபாளம்: மக்கள் போராட்டத்தில் 19 பேர் படுகொலை – உணர்த்தும் உண்மை என்ன?

0
மக்கள் மீதான நேபாள அரசின் கொடூரமான அடக்குமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. அதே சமயம், தற்போது நடைபெற்றுவரும் ஜென் சி தலைமுறையினரின் போராட்டத்தை இந்திய ஆளும் வர்க்கக் கும்பலும், ஏகாதிபத்தியங்களும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதையும் மறுக்க முடியாது.

விநாயகர் சிலை கரைப்புக்காக நாசப்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் கடற்கரை

0
பிளாஸ்டர் அஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளில் வேதிப்பொருட்கள் உள்ளன. சிலைகளுக்குப் பூசப்படும் இரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. ஆனால் உத்தரவுகளையெல்லாம் மீறி இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டி.சி.எஸ்

0
ஐ.டி ஊழியர்களுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதன் காரணமாக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நோக்கில் கார்ப்பரேட் ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை!

0
அரசியல் கட்சிகளோ போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பிரான்சிஸ்கா அல்பனேஸ்: போர்க்குற்றங்களுக்கெதிரான போர்க்குரல்

0
அமெரிக்க அரசை மட்டுமல்ல, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் போர்க்குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளை பிரான்சிஸ்கா எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை

0
அல்பனேஸின் அறிக்கையானது ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளின் இலாபவெறியையும் போர்வெறியையும் அமெரிக்க – இஸ்ரேல் கும்பலின் நோக்கத்தையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.

இரண்டு தற்கொலை சம்பவங்கள் – உணர்த்தும் உண்மைகள்!

0
இளம் தலைமுறை இந்தப் பிற்போக்குத்தனங்களைக் கடப்பதற்குத் துணியும்போது, இன்னொரு பக்கம் அதற்கான எதிர்ப்புகளும் வலுவாகத் தோன்றவே செய்கின்றன. அத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு இடம் கொடுப்பதுதான் இத்தகைய துயரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.