ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்து கைது செய்! – எழுச்சிகரமாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பேருந்து நிலையம் எதிரில், "பாசிஸ்டுகளின் கைக்கூலி ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்து கைது செய்! எஸ்.ஐ.ஆர்-ஐ இரத்து செய்!" என்ற முழக்கங்களின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் பட்டாபி அவர்கள் தலைமை தாங்கினார்.
பு.மா.இ.மு. தோழர் தீரனின் கல்வி உரிமையை உறுதி செய்! | பு.ஜ.தொ.மு.
சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளர் ரீட்டா ஜான் மூலம் சாதியப் பழிவாங்கல் வழிமுறையில் தோழர் தீரனின் சேர்க்கைப் பதிவை ரத்து செய்து, அவரது கல்வி உரிமையைப் பறித்திருக்கிறது. மேலும், நியாயம் கேட்டு போராடிய மாணவர்கள் மீது த.வெ.க. அரசின் போலீசுதுறையை ஏவி, போராட்டத் தீயை அணைக்கப் பார்க்கிறது.
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
தியாகி இமானுவேல் சேகரன், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன், மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி.
இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல; தமிழ்நாட்டு மண்ணில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் வீறுகொண்டு எழுந்த போராட்டங்களின் முகவரிகள்.
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவு நாட்கள்! | நினைவேந்தல் கூட்டங்கள்
செப்டம்பர் - 11, 12, 13, 14
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்பு போராளிகள்
தியாகி இம்மானுவேல் சேகரனார், தோழர் பாலன், தோழர் மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவுநாள்!
தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் நினைவேந்தல் கூட்டங்கள்









