🔴சிறப்பு நேரலை: தென்மாவட்டங்களில் தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள் | அரங்கக் கூட்டம்
நாள்: 23.09.2026 | நேரம்: மாலை 4 மணி
கடலூர் – கரிக்குப்பம்: தலித் மாணவர்களை செருப்பைத் தலையில் சுமக்கச் சொன்ன வன்னியர் சாதிவெறியர்கள்
வன்னியர் சாதிவெறியர்கள் தலித் மக்களின் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி இந்த சாலை வழியாக செல்லக்கூடாது எனத் தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மறுநாள் அவ்வழியில் பள்ளிக்குச் சென்ற தலித் மாணவர்களை வழிமறித்து, செருப்பை எடுத்து தலையில் வைத்து செல்லும்படியும் இவ்வீதியில் இனி வந்தால் சாணியால் அடிப்போம் என்றும் சாதித் திமிருடன் அச்சுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜாதி-தீண்டாமைக் கொடுமைகள்– ஒரு கள ஆய்வு | நூல் அறிமுகம்
மதுரை, சிவகங்கை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர், கடலூர், பெரம்பலூர், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 780 ரிசர்வ் ஊராட்சிகளில் 386-இல் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 30 வகையான தீண்டாமை வடிவங்களைப் பட்டியலிட்டு கேள்விப் படிவங்களைக் கொண்டு டிசம்பர் 2006 முதல் நவம்பர் 2007 வரை நடத்தப்பட்ட விரிவான ஆய்வறிக்கையாகும்.
மதுரை கருக்கட்டான்பட்டி: கழிவறை வசதிக்காக 15 ஆண்டுகள் போராடும் அவலம்
உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியில், தலித் மக்களின் குடியிருப்பில் கழிவறை வசதி இல்லாததால் அம்மக்கள் பல தலைமுறைகளாக அவதிப்பட்டு வருகின்றனர். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய-மாநில அரசுகள் தம்பட்டம் அடிக்கும் நாட்டில், அடிப்படை கழிவறை வசதிக்காக மக்கள் 15 ஆண்டுகளாகப் போராடி வருவது வெட்கக்கேடானது.
எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தை ஒழித்துக்கட்டத் துடிக்கும் உச்சநீதிமன்றம்
இத்தீர்ப்பானது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட முன்னோடிகளை நெஞ்சிலேந்துவோம்!
இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
தியாகி இமானுவேல் சேகரன், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன், மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி.
இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல; தமிழ்நாட்டு மண்ணில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் வீறுகொண்டு எழுந்த போராட்டங்களின் முகவரிகள்.
மொதராத்திரி திரைவிமர்சனம்: சாதிவெறி – ஆணாதிக்கத்தை விமர்சனப்படுத்தும் ஊக்கமுள்ள படைப்பு
இன்றைய தலைமுறையை பிற்போக்குச் சிந்தனைகளுக்குப் பின்னால் அடிமைத்தனமாகச் செல்பவர்களாகக் காட்டாமல், அதை மீறும் தன்மையை இயல்பில் கொண்டவர்களாகக் காட்டுகிறார் இயக்குநர். திருமண நிகழ்வின் ஊடாக, ஆதிக்கச் சாதி இளம்பெண்ணுக்கும் பட்டியல் இன இளைஞனுக்கும் இடையேயான ஒரு காதலும், அந்த இளைஞனின் சுயமரியாதைக்கான போராட்டக் குணமும் இயல்பாகக் காட்டப்படுகிறது.
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவு நாட்கள்! | நினைவேந்தல் கூட்டங்கள்
செப்டம்பர் - 11, 12, 13, 14
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்பு போராளிகள்
தியாகி இம்மானுவேல் சேகரனார், தோழர் பாலன், தோழர் மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவுநாள்!
தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் நினைவேந்தல் கூட்டங்கள்
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரனின் 69-ஆம் ஆண்டு நினைவு நாள் | மீள்பதிவு
தலித் மக்கள் மீதான சாதி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் தொடர்ச்சியாகவும், பெருமாள் பீட்டர் உடன் இணைந்தும், தலித் பேந்தர்ஸ் மலைச்சாமியின் முன்னோடியாகவும் போராடிய இமானுவேல் சேகரன் சமத்துவமான சமூகம் அமைக்கும் போராட்டக் களத்தில் ‘வெட்டருவா, வேல் கம்புக்கு’ தன் இன்னுயிரை பலி கொடுத்து சாதி ஒழிப்பு தியாகியானார்.
கள்ளக்குறிச்சி: உணவின்றி தவிக்கும் சமூக நல விடுதி மாணவர்கள்
இவ்விடுதி பிரச்சினை ஊடகங்களில் வெளியாகி கவனத்தை பெற்ற நிலையில், இதனை தனிப்பட்ட பணியாளர்கள் பிரச்சினையாக ஊடகங்களும் சம்பந்தபட்ட அதிகாரிகளும் திசைதிருப்புகின்றனர். ஆனால், இது தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்களுக்கான அரசு விடுதிகள் அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வரும் போக்கின் அங்கம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தென்மாவட்டங்களில் தொடரும் சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்கள்: நாம் என்ன செய்யப் போகிறோம்? | துண்டறிக்கை – ம.அ.க.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைத் தம் களமாகப் பயன்படுத்தி, தலித் மக்களைத் தாக்குதல் இலக்காக்கி, ஆதிக்கச் சாதி வெறியர்களை ஏவிவிட்டு சாதி வெறியாட்டம் ஆடுகிறது பாசிசக் கும்பல்!
செங்கல்பட்டு: வர்க்க ஏற்றத்தாழ்வால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!
ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரவீன் தன் மகளைக் காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கூலிப்படையின் துணைகொண்டு ஏழுமலை, பிரவீனை ஆணவப்படுகொலை செய்துள்ளார்.
மேட்டூர் – காவேரிபுரம்: பட்டியலின மக்களை இழிவுபடுத்தி, பதற்றத்தைத் தூண்டிய ஆதிக்கச் சாதிவெறியர்களைக் கைது செய்!
ஆதிக்கச்சாதியைச் சார்ந்த சதாசிவம் என்ற நபர், பட்டியலின மக்களை சாதிரீதியாக இழிவுபடுத்திப் பேசியதே பிரச்சினை உருவாவதற்கு அடிப்படையான காரணம். இந்நிலையில், பிரச்சினையைத் தூண்டிய ஆதிக்கச் சாதிவெறியையும், பட்டியலின மக்கள் அத்தவறைத் தட்டிக் கேட்டதையும் ஒரே தட்டில் வைத்து அணுகும் போலீசின் அணுகுமுறையை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
கொடைக்கானல் பூம்பாறையில் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தோழர்கள் நேரில் ஆறுதல்
ராமரின் பாதிக் கழுத்தில் அரிவாள் இறங்கிய நிலையில் ராமர் மற்றும் பிரசாந்த் இருவரும் ரகுவை பார்த்து, “என்ன அண்ணே, இப்படிப் பண்ணிட்ட?” என்று கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த்தையும் இடதுபுறம் கண்ணோடு சேர்த்து வெட்டியுள்ளான். மேலும், ராமரை 64 முறை வெட்டியுள்ளான். இருவரும் மயங்கிய நிலையில் கீழே விழுந்துவிட்டார்கள்.




















