செப்டம்பர் – 11, 12, 13, 14
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்பு போராளிகள்
தியாகி இம்மானுவேல் சேகரனார், தோழர் பாலன், தோழர் மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவுநாள்!
தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் நினைவேந்தல் கூட்டங்கள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
- ஆணவப் படுகொலைக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதி வெறியாட்டங்களைத் தூண்டிவரும் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்வது; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்று!
- சாதி, மத மறுப்பு மணங்களை மக்கள் முன்னிலையில் அரசே முன்னின்று நடத்தி அங்கீகரி! சாதி, மத மறுப்பு மணம் புரியும் இணையர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு! ஊக்கத்தொகை வழங்கு! சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்து! மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் “சாதி, மதமற்றவர்” என்று பதிவு செய்ய தனிப்பிரிவை உருவாக்கு!’ “சாதி, மதமற்றோர்” என சான்றிதழ் பெற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கு!

- டாஸ்மாக்கை மூடு போதைப் பொருட்களைத் தடை செய்! பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத போலீசு அதிகாரிகளைத் தண்டித்திடு பெண் கல்வி, பெண் சுதந்திரத்தை மறுக்கும், பெண்களை போகப் பொருளாக்கும் ஆபாசத் திரைப்படங்கள், இணையதளங்கள், நாடகங்கள், புராண இதிகாசங்கள் உள்ளிட்டவற்றைத் தடைசெய்!
- கீழடி தொல்லியல் புதையல்கள், பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுகள், சமணர் குகைகள் போன்ற தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு – டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு ஐல்லிக்கட்டுப் போராட்டங்களின் தொடக்கப்புள்ளியாகவும், விடுதலைப் போரின் தொடக்கப்புள்ளியாகவும், திருப்பரங்குன்றம், பறம்பு மலை என மதநல்லிணக்க அடையாளங்களின் தாய்மண்ணாகவும் பார்ப்பனிய எதிர்ப்பு நாட்டார் தெய்வ, குல தெய்வ வழிபாடுகளின் அடையாளமாகவும் திகழ்கின்ற மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவி! இந்த மரபுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்!
- இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயம், சிறு-குறு வணிகத்தை அழிக்கும். கல்வி, மருத்துவத்தைப் பண்டமாக்கும், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் கொள்கைகள், திட்டங்களைக் கைவிடு! தமிழ்நாட்டை ஆக்கிரமித்துள்ள மார்வாடி கும்பலை வெளியேற்று!
போராடும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மேற்கண்ட ஒவ்வொரு கோரிக்கைகளுக்காகவும் தேர்தலுக்கு வெளியே மாநில, மாவட்ட, வட்டார அளவிலான ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டமைப்புகளை கட்டி அமைப்போம்!
மக்கள் அதிகாரக் கழகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.)
தமிழ்நாடு-புதுச்சேரி.
9962366321, 9791653200, 9444836642, 7397404242.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











