நவ. 1 – தமிழ்நாடு நாள்: மதுரையில் பொதுக்கூட்டம் | அக்டோபர் 31

தேதி: அக்டோபர் 31 | நேரம்: மாலை 5 மணி | இடம்: மந்தைத்திடல், அவனியாபுரம், மதுரை.

நவம்பர் 1 – தமிழ்நாடு நாளை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன் அங்கமாக அக்டோபர் 31 அன்று மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

***

நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்:

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கும் அம்பானி-அதானிகளுக்கும் தமிழ்நாட்டை தாரைவார்க்காதே!

பொதுக்கூட்டம் | மதுரை

தேதி: அக்டோபர் 31 | நேரம்: மாலை 5 மணி

இடம்: மந்தைத்திடல், அவனியாபுரம், மதுரை.

 

***

  • மதுரை மண்டலமானது, வைகை, கீழடி, சமணப் படுகைகள், அரிட்டாபட்டி மலைகள், கல்வெட்டுகள், நாட்டார் வழிபாட்டு மரபுகள், கோயில்கள், தர்காக்கள் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் உருவாக்கிய தமிழ்ப் பண்பாட்டின் பெரும் நிலப்பரப்பாகும்; தமிழ்ப் பண்பாட்டின் ஆதாரங்களாகும். ஆகையால், மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக அறிவித்து பாதுகாத்திடு!
  • மேலூர்-கல்லாங்காடு பகுதியில் தொழிற்பேட்டை: சின்ன உடைப்பு பகுதியில் விமான நிலைய விரிவாக்கம்; மேலூர், வாடிப்பட்டி, பூச்சம்பட்டி, உசிலம்பட்டி அருகில் எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், செல்லாயிபுரம், சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை, ஜெயம்கொண்டநிலை, விருதுநகர் மாவட்டம் – குருந்தமடம் பகுதிகளில் கல்குவாரிகள்… என மலைகள், காடுகள், விவசாய நிலங்களை அழிக்காதே! மக்களின் நீராதாரம், பல்லுயிர்ச்சூழல், தமிழ் மக்களின் வரலாறு, தொல்லியல் சின்னங்கள், மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாத்திடு!
  • தேனி மாவட்டம் மேகமலையில் புலிகள் காப்பக விரிவாக்கம் என்கிற பெயரில் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் வசித்து வரும் 98 மலைக் கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும் திட்டத்தை உடனடியாகக் கைவிடு!
  • மதநல்லிணக்கத்தின் அடையாளம் மதுரை; திருப்பரங்குன்றம் அதன் சிகரமாகும். அந்த திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவை அகற்ற நினைக்கும் பாசிசக் கும்பலுக்குத் துணை போகாதே! ஆடு, கோழி பலியிட்டு வணங்கும் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவோம்! திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!
  • சிறுவணிகர்கள், சிறு-குறு தொழில்புரிவோரின் வாழ்வுரிமையை அழிக்கும் மார்வாடி சேட்டுகளின் கொள்ளையை அனுமதிக்காதே!
  • சாதிவெறி, மதவெறியைத் தூண்டிவிடும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகளையும் தடை செய்!

மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
மதுரை மாவட்டம்.
97916 53200, 84386 31587, 78268 47268

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க