
16.10.2026
பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் பேரணி நடத்த
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியும் த.வெ.க. அரசின் துரோகமும்!
பத்திரிகைச் செய்தி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி தமிழ்நாட்டில் 128 இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அனுமதி கேட்டுள்ளார்கள். இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய அரசு வழக்கறிஞரோ இன்னும் பல இடங்களில் மனு கொடுக்கவில்லை போக்குவரத்து நெரிசல் உள்ளது என்று உப்புக்குச் சப்பான காரணங்களைச் சொல்லி உள்ளார். தமிழ்நாடு அரசு இந்துத்துவ மதவெறி கொண்ட பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ எவ்வளவு சாதாரணமாக அணுகுகிறது என்பது இதிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு குண்டுவெடிப்புகள், பல்வேறு மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த பாசிச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டிய ஒரு அமைப்பு.
இன்றைய தமிழ்நாட்டின் நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஆதிக்கச் சாதி வெறி தாக்குதலும், சாதி ஆணவப் படுகொலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோன்ற ஆதிக்கச் சாதி வெறி தாக்குதல்களையும் ஆணவ படுகொலைகளையும் அரங்கேறுவதற்குக் காரணமான ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களுக்குப் பின்னால் இருந்து சாதி மத வெறியைத் தூண்டி விடுகிறது ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. பாசிச கும்பல். தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த மோசமான நிலைமையை மேலும் தீவிரப் படுத்துவதற்குத் துணை போயுள்ளது உயர் நீதிமன்றம்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி மண்டைக்காடு கலவரத்தை உருவாக்கியது? கோயம்புத்தூரில் எப்படி கலவரத்தை நடத்தியது? இன்று எப்படி திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது? என்பதற்கு ஏராளமான ஆவணங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் நம் கண்முன்னே இருக்கிறது. ஆக இது போன்ற தடை செய்யப்பட வேண்டிய பாசிச கும்பலை பேரணி நடத்துவதற்கு அனுமதிப்பது என்பது ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதை நோக்கி நகர்த்துவது.
ஜனநாயகத்திற்கு விரோதமான தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு என்ற அடிப்படையில் தனது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்யாமல் த.வெ.க. அரசு வேடிக்கை பார்ப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
ஆகவே நீதிமன்ற தீர்ப்பிற்கும் த.வெ.க. அரசின் நடவடிக்கைக்கும் கழகம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆகவே தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபையும் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் வலுவான கன்னடங்களைப் பதிவு செய்யுமாறு மக்கள் அதிகார கழகம் கேட்டுக்கொள்கிறது.
- நீதிமன்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெறு!
- பாசிச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். கும்பலைத் தடை செய்!
- அரசு எந்திரத்தில் புகுத்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. சார்பு அதிகாரிகளை அப்புறப்படுத்து!
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
கழகப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





