வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பேருந்து நிலையம் எதிரில், “பாசிஸ்டுகளின் கைக்கூலி ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்து கைது செய்! எஸ்.ஐ.ஆர்-ஐ இரத்து செய்!” என்ற முழக்கங்களின் கீழ் அக்டோபர் 18 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் பட்டாபி அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்திய தேசிய விடுதலை முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர் ராஜா, பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேலும், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் மதனகவி மற்றும் இணைச் செயலாளர் பகுத்தறிவாளர், தமிழின மறுமலர்ச்சி இயக்கத்தின் மாநில தலைவர் லியாகத் அலி ஆகிய இருவரும் சகோதரர்கள் போல் வாழ்ந்து வரும் நம்முடைய நாட்டில், சாதி மதத்தின் பெயரில் மக்களைப் பிரித்து அடக்கி ஒடுக்கி வருகிறார்கள் என்பதையும் நாம் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.
திராவிடர் விடுதலை கழக தோழர் பார்த்திபன், சமூக ஆர்வலர் சுபாகரன், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் சங்கர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தங்களது உரையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மோடி-அமித்ஷா கும்பலுக்கு விசுவாசமாக இருந்து, பா.ஜ.க-வுக்கு எதிரான மக்களின் வாக்குரிமையைப் பறித்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சதிவேலை செய்துள்ளார் என்பதை விளக்கிப் பேசினார்.
மேலும், டெல்லியில் போராடும் மாணவர்கள், பெண்கள் இளைஞர்களை போலீசு, துணை இராணுவ படை மூலம் கொடூரமாகத் தாக்குவது, கைது செய்து சிறையிலடைப்பது, போராட்டத்திற்குத் தடைவிதிப்பது போன்ற பாசிச அடக்குமுறைகளை மோடி அரசு மேற்கொண்டு வருவதைக் கண்டித்தனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவரும் விஜய் அரசும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது, போராடுபவர்களைக் கைது செய்வது, கொடூரமாகத் தாக்குவது என மோடி-அமித்ஷா கும்பலுக்குச் சாதகமான வகையில் போராட்டத்தை ஒடுக்குவதையும் அம்பலப் படுத்தினர்.
ஆகவே, மாணவர், இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாடெங்கும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர்.
சிறுகடை வியாபாரிகள், பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற மக்கள் என நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தை ஆர்வமுடன் நின்று கவனித்தனர்.
மக்கள் அதிகாரக் கழகம்,
வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
84897 35841, 90427 46881.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





