பாசிஸ்டுகளின் கைக்கூலி ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்து கைது செய்! எஸ்.ஐ.ஆர்-ஐ இரத்து செய்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாசிச பா.ஜ.க. வெற்றிபெற, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அம்பலமானது தேர்தல் ஆணையத்தின் சட்டவிரோதம்!
கடந்த செப்டம்பர் 23 அன்று “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரை, தேர்தல் ஆணையத்தின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும் ஞானேஷ் குமாரின் எதேச்சதிகாரப் போக்கையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
- தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- அவர்களின் எதிர்ப்பை மீறியும், அவர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகவும் ஞானேஷ் குமார் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
- சில உத்தரவுகளை மற்ற இரு ஆணையர்களும் ஊடகங்கள் மூலமே தெரிந்துகொள்ளும் கேலிக்கூத்து அரங்கேறியுள்ளது.
- அரசியலமைப்புச் சட்டப்படி, மூன்று ஆணையர்களும் இணைந்து ஒருமனதாகவோ பெரும்பான்மை அடிப்படையிலோ முடிவெடுக்க வேண்டும். ஆனால் இரு ஆணையர்களின் ஒப்புதலின்றியே உத்தரவுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
“படிவம் 6” –
மறைமுகமாக என்.ஆர்.சி அமல்!
புதிய வாக்காளர் விண்ணப்பமான படிவம் 6-இல், “வாக்காளர் அல்லது அவரது பெற்றோர்/தாத்தா-பாட்டியின் பெயர் கடைசியாக நடந்த எஸ்.ஐ.ஆர்-இல் இடம்பெற்றிருந்ததா” என்ற கேள்வி கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. இது என்.ஆர்.சி-யை மறைமுகமாக திணிக்கும் நடவடிக்கை.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததும், “இதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது” என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், “படிவம் 6-இன் எந்தவொரு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திற்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துவிட்டார். பா.ஜ.க. பாசிச நோக்கத்திற்கு ஏற்ப சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது இதனால் உறுதியாகிறது.
13 கோடி வாக்காளர்கள் நீக்கம்!
- இதுவரை, எஸ்.ஐ.ஆர். மூலம் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் குறிவைத்து நீக்கப்படுவதையும், நீக்கங்கள் பா.ஜ.க. வெற்றிக்குச் சாதகமாக இருப்பதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
- “தி இந்து பிசினஸ்லைன்” ஆய்வின்படி, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் மூலம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் பெரும்பாலும் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் –
பா.ஜ.க-வின் அடியாள் படை!
- பா.ஜ.க. சொல்லும் நாளில் தேர்தல் தேதி அறிவிப்பது முதல் அதை ஆட்சியில் அமர்த்துவது வரை, தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் அடியாள் படையாக மாற்றப்பட்டுள்ளது.
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கூட பெற முடியாத பா.ஜ.க., அதன் பிறகு சட்டமன்றத் தேர்தல்களில் அடுத்தடுத்து வெல்வதற்குக் காரணம் தேர்தல் ஆணையத்துடனான இந்தக் கள்ளக் கூட்டணியே.
- இந்த வெற்றிகளால் சிவசேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒழித்துக்கட்டப்படுகின்றன. இது எதிர்க்கட்சிகளே இல்லாத, ஒரு கட்சி பாசிச சர்வாதிகாரம் நிலைநாட்டப்படுவதன் அறிகுறி.
- மேலும், எஸ்.ஐ.ஆர். போன்றே தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற இந்துராஷ்டிர அடிக்கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
மொத்தத்தில், சிறுபான்மை – ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமை – குடியுரிமை – வாழ்வுரிமையைப் பறித்து அம்மக்களை இந்துராஷ்டிரத்தின் இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற பாசிச கும்பலின் இந்துராஷ்டிரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறது “இந்துராஷ்டிரத்” தேர்தல் ஆணையம்!
ஆகவே,
- பாசிஸ்டுகளின் கைக்கூலி ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து கைது செய்!
- பாசிசமயமாகியுள்ள தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடு!
- எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து, இரத்து செய்!
- எஸ்.ஐ.ஆர். மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் உறுதி செய், இழப்பீடு வழங்கு!
- எஸ்.ஐ.ஆர். மூலம் மோசடியாக நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களையும் இரத்து செய்!
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களைக் கட்டியமைப்போம். இப்போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடித்து, அதிகார வர்க்கம் ஆட்சி செலுத்தும் போலி ஜனநாயகத்தைத் தகர்க்கும் போராட்டமாக வளர்த்தெடுப்போம்.
தேர்ந்தெடுத்தவரைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் கொண்ட தேர்தல் முறையையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக முறைகளைக் கொண்ட தேர்தல் ஆணையத்தையும் உடைய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்கப் போராடுவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 18.10.2026, ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: காலை 10 மணி,
இடம்: பேர்ணாம்பட் பேருந்து நிலையம் எதிரில்
தலைமை:
தோழர் பட்டாபி தலைவர், பு.ஜ.தொ.மு.
கண்டன உரையாற்றுவோர்:
- தோழர் சங்கர், மாவட்ட செயலாளர், ம.அ.க.
- தோழர் சுந்தர், பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு.)
- தோழர் ராஜா, மாவட்ட தலைவர், இ.தே.வி.மு.
- தோழர் ஞானவேல், செயலாளர், அடுக்கம் பாறை கிளைச் சங்கம், பு.ஜ.தொ.மு.
- தோழர் முன்ரத்தினம், தலைவர், ம.ந.சே.ச.
- தோழர் லியாகத் அலி, மாநில தலைவர், த.இ.ம.க.
- தோழர் மதனகவி, மாவட்ட செயலாளர், மா.பெ.பொ.க.
- தோழர் பரசுராமன், அமைப்பாளர், பா.பா.ச.வி.இ.
- தோழர் சரோஜா, மாவட்ட செயலாளர், CPIML.
- வழக்கறிஞர் தோழர் சிவா, மாவட்ட செயலாளர், தி.வி.க.தோழர் சங்கரி, மாவட்ட செயலாளர்,CPIM.
- தோழர் ஆலியார் சூல்தான், மாவட்ட செயலாளர், ம.ம.க.
- தோழர் பூவரசன், மாநில தலைவர், த.ம.க.
- அஹமத் ஜான், மாவட்ட தலைவர், மு.மா.பே.
- தோழர் துரை செல்வம், மாவட்ட துணை செயலாளர்,CPI
- தோழர் செல்லப்பாண்டியன், மாநில கருத்தியல் செயலாளர், வி.சி.க.
- தோழர் நேய சுந்தர், மாவட்ட தலைவர், அ.ந.ம.
- தோழர் சுபாகரன், சமூக ஆர்வலர்.
- தோழர் கோபி, தோழர் நந்தகுமார், அ.ம.
நன்றியுரை: தோழர் சூர்யா.
அனைவரும் வாரீர்! ஆர்ப்பாட்டத்தில் அணிதிரள்வீர்!
ஒருங்கிணைப்பு,
மக்கள் அதிகாரக் கழகம்,
வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
8489735841, 9042746881
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





