நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வூருக்கு அருகில் உள்ள மலை கிராமமான அம்பாள் நகரில் 50 குடும்பங்களுக்கும் மேல் ஆதிதிராவிட மற்றும் அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அடிப்படை உரிமையான சாலை வசதி அமைத்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து 40 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இவர்களது குடியிருப்பிலிருந்து முதன்மை சாலைக்கு சாலை அமைப்பதற்குத் தடையாகச் சில தனியார் நில உரிமையாளர்களுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் சாலை அமைக்கத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தி சாலை அமைத்துத் தருமாறு இம்மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். மேலும், அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் ஆட்சியருக்கு அனுப்பும் போராட்டம் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், இன்று வரை இவர்களது சாலை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 40 வருடங்களுக்கும் மேலாகப் போராடி வரும் அம்பாள் நகர் மக்களுக்கு உடனடியாக சாலை அமைத்துத் தருமாறு தமிழ்நாடு அரசை, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மக்கள் அதிகாரக் கழக ஒருங்கிணைப்பில் ஆகஸ்டு 27 முதல் தொடர் உண்ணா நிலை மற்றும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டம் குறித்த செய்திகள் இந்த live blog-இல் தொடர்ந்து பதிவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணைந்திருங்கள்…
***
கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு சாலை வசதிக்கோரி உண்ணாநிலை போராட்டம்! | துண்டறிக்கை
***










