புமாஇமு
சென்னைப் பல்கலை பு.மா.இ.மு. தோழர் நீக்கம்: பதிவாளரின் சாதியப் பழிவாங்கல்!
கடந்த கல்வியாண்டில் தோழர் தீரன் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தால் எவ்வித ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது முறையான விசாரணைக்குழு நடவடிக்கையோ எடுக்கப்பட்டது இல்லை. அவர் பல்கலைக்கழகத்தின் சீர்கேடுகளுக்கு எதிராகவும், மாணவர் உரிமைகளுக்காகவும், சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடியதே அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணமாகும்.
மாணவர் விரோத – தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம் | பு.மா.இ.மு. கண்டனம்
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 24 அன்றே முடிந்துவிட்ட நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளில் இச்சட்டத்திருத்தத்தை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது. இது, தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்க பாதை அமைத்துதரும் நடவடிக்கையாகும். உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் நடவடிக்கையும் ஆகும்.
டெல்லி மாணவர் விடுதி இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: பு.மா.இ.மு. கண்டனம்
இக்கொடூரச் சம்பவத்திற்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. அரசின் முதல்வர் ரேகா குப்தா பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பான - கட்டணமற்ற தங்குமிடங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் பு.மா.இ.மு. சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாடு | துண்டறிக்கை – பு.மா.இ.மு.
தலித்துகளைக் காதலிப்பதைத் தடுக்க
“நாடகக் காதல்!”
இஸ்லாமியர்களைக் காதலிப்பதைத் தடுக்க
“லவ் ஜிகாத்!”
இது, இணையைத் தேர்ந்தெடுக்கும்
பெண்களின் உரிமையை மறுக்கும்
சாதிவெறியர்களும் சங்கிகளும்
சங்கமிக்கும் இடமல்லவா?
ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாட்டின் அறிமுக நிகழ்ச்சி | பு.மா.இ.மு.
அக்டோபர் 25 அன்று நடக்கவுள்ள பு.மா.இ.மு-வின் எழுச்சி மாநாடானது சாதிய - ஆணாதிக்கக் கட்டமைப்பிற்கு எதிராக எழவிருக்கும் ஜென் சி - ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சியின் தொடக்கத்தை அறிவிப்பதாக தோழர் அறிவு எழுச்சி உரையாற்றினார். கொட்டும் மழையிலும் பேருற்சாகத்துடன் நடைபெற்ற இந்த அறிவிப்பு நிகழ்ச்சி, மாநாட்டின் எழுச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
இந்திய வானில் ஒரு புதிய சிவப்பு நட்சத்திரம் உதயம்! பேரெழுச்சியுடன் நிறைவுற்ற பு.மா.இ.மு. செயல்வீரர்கள் கூட்டம்!
எமது அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் முதல் மாநில அமைப்பு மாநாடு 15.10.2026 அன்றும் “சாதியும் ஆணாதிக்கமும் வேண்டாம்! சமத்துவம் வேண்டும்!” என்ற முழக்கத்தை முன்வைத்து ஜென்சி–ஜென் ஆல்ஃபா எழுச்சி மாநாடு 25.10.2026 அன்றும் நடைபெற உள்ளதைப் பெரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீ பரவட்டும்! அரசுப் பள்ளிகளைக் காப்போம் — கல்வி உரிமைக்காக வீதிக்கு வருவோம்! | பு.மா.இ.மு.
கரப்பான்பூச்சிகள் அதிகாரத்தின் அசைக்க முடியாத மோடி பிம்பத்தில் உடைப்பை ஏற்படுத்தின. கட்டெறும்புகள் பள்ளி வாசல்களிலிருந்து புறப்பட்டுவிட்டன. அவர்கள் பற்ற வைத்த தீ ஒரு பள்ளியோடு அணையக்கூடாது.
பள்ளிகளில் சாதிய வன்முறையைத் தூண்டும் த.வெ.க. அரசின் புதிய அடையாள அட்டை: பு.மா.இ.மு கண்டனம்!
ஒரு மாணவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை வண்ணக் கயிறுகள் மூலமே கண்டறிந்து, தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்படும் சூழலில், மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் சேர்ப்பது, அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் அறியவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளும், ஆதிக்க சாதி வெறி சங்கங்களும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றவும் ஏதுவாக அமையும் நடவடிக்கையாகும்.
தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் மீதான தாக்குதல்: காண்ட்ராக்ட்மயத்தை ஒழிக்காமல் தீர்வில்லை
தொழிலாளர்களை மிகக் கடுமையான முறையில் சுரண்டும் காண்ட்ராக்ட்மயத்தை - தனியார்மயத்தை ஒழிப்பதே இதற்கான தீர்வாகும். மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
தவறான சிகிச்சையால் மாணவி பலி: மருத்துவர்களின் உரிமத்தை இரத்து செய்! | பு.மா.இ.மு.
மாணவி சீதா உயிரிழந்ததற்கு அரசு மருத்துவக் கல்லூரி தான் முழுக்காரணம். மேலும் மாணவியின் இறப்பினை போலீசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் அங்கு போராடக்கூடிய மாணவிகள் மிரட்டப்படுகின்றனர். இதனை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பரோடா பல்கலையில் மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.
மாணவர் சங்கங்களை முடக்க நினைத்த நேபாள அரசு: மாணவர் போராட்டத்தால் தற்காலிகத் தடை!
மாணவர் சங்கங்களைக் கலைக்கும் நேபாள அரசின் முடிவுக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இத்தடையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி முகில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
78 மாணவர்களின் வாழ்க்கையில் ஓராண்டை அழித்துவிட எத்தனிக்கிறது நிர்வாகம். பல்கலைக்கழகத்திடம் மாணவர்கள் முறையிடவே, அவர்கள் ஏதோ தங்களுக்கு தொடர்பே இல்லை என்பது போலவும், நீங்கள் கல்லூரியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் பதிலளித்து தனது தார்மீக பொறுப்பை கைகழுவியுள்ளனர்.
பாசிச பா.ஜ.க அரசே! ஒடிசாவில் நடத்திவரும் நரவேட்டையை உடனே நிறுத்து!
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் 13 பேரின் உயிரைக் குடித்த வேதாந்தா நிறுவனத்திற்காக நாடு முழுவதும் மலைகளையும் காடுகளையும் தாரைவார்க்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராகக் களத்தில் ஒன்றிணைவோம்.
பாதுகாப்பற்ற நிலையில் அம்பேத்கர் சட்டப் பல்கலை.: மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் எங்கே?
பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் பல்கலைக்கழகம், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஆண்டுக்கு ₹20,000 வசூலிக்கிறது. அந்தப் பணம் யாருடைய பைக்குச் செல்கிறது? கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. எவ்வித அடிப்படை கட்டமைப்பும் முறையாக இல்லை.















