
03.09.2026
பு.மா.இ.மு. முதல் மாநில மாநாடு மற்றும்
ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாட்டின் அறிவிப்பு நிகழ்ச்சி!
பத்திரிகைச் செய்தி
அன்பார்ந்த மாணவர்களே! ஜனநாயக சக்திகளே!
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் முதல் மாநில அமைப்பு மாநாடு (அக்டோபர் 15) மற்றும் ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாடு (அக்டோபர் 25) ஆகியவற்றின் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 03, 2026) மாலை 6 மணிக்கு சென்னை கன்னிமரா நூலகத்தில் பேராசான் காரல் மார்க்ஸ் சிலை முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தீரன் தலைமை வகித்தார்.
மக்கள் அதிகாரக் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் ஆகியோர் முன்னிலையில் பு.மா.இ.மு-வின் ஜென் சி -ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாட்டின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டர் உற்சாகமாக வெளியிடப்பட்டது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பேசிய கழகப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் வரலாற்றையும் இன்றைய மாணவர்களின் அரசியல் சூழல், போராட்டங்களையும் முன்னிறுத்தி சிறப்புரையாற்றி, பு.மா.இ.மு. தோழர்களை வாழ்த்தினார்.
அடுத்ததாகப் பேசிய பு.மா.இ.மு-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், பு.மா.இ.மு-வின் போராட்ட வரலாற்றையும் இப்போது பு.மா.இ.மு. முன்னெடுத்துள்ள ஜென் சி- ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாட்டை பற்றியும் உரையாற்றி தோழர்களை வாழ்த்தினார்.
அடுத்ததாக, புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பு குழு தோழர் அறிவு, இன்றைய பள்ளி, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சாதியத் தாக்குதல்களும் அதிகரித்து வரும் இச்சூழலில் பு.மா.இ.மு. கையில் எடுத்துள்ள இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்திப் பேசினார். இம்மாநாடானது சாதிய – ஆணாதிக்கக் கட்டமைப்பிற்கு எதிராக எழவிருக்கும் ஜென் சி – ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சியின் தொடக்கத்தை அறிவிப்பதாக எழுச்சி உரையாற்றினார்.
கொட்டும் மழையிலும் பேருற்சாகத்துடன் நடைபெற்ற இந்த அறிவிப்பு நிகழ்ச்சியானது மாநாட்டின் எழுச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
![]()
இவண்
தோழர் ஆதி,
செய்தி தொடர்பாளர்,
மாநாடு ஒருங்கிணைப்புக் குழு.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











