20.09.2026

ஓசூர்:  கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்திய செயின்ட் அகஸ்டின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து தர்மபுரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஒன்னல்வாடி பகுதியில்  செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (St. Augustine Matric Hr. Sec. School) என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவ-மாணவிகளிடம் தனியார் பள்ளி நடத்தை விதிமுறைகளை மீறி பல வகைகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 19 அன்று, குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்தாத குழந்தைகள் மற்றும் சிறு வயது மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்காமல் சுட்டெரிக்கும் வெயிலில் மணிக்கணக்கில் வெளியே நிறுத்தி வைத்த கொடூரச் செயல் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயின்ட் அகஸ்டின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கையினால் சிறு வயது பள்ளி மாணவிகள் உடல் சோர்வு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து பல வருடமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல்வேறு மாணவர் இயக்கங்கள் மற்றும் கல்வி உரிமைக்கான இயக்கங்களின், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களில் ஏற்படுத்திய நிர்பந்தத்தின் காரணமாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு  விதிமுறைகளை வகுத்துள்ளது.

ஆனால், பெயரளவுக்கான நடவடிக்கைகளைத்  தாண்டி தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.  த.வெ.க. ஆட்சிக்கு வந்தபிறகு நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சரைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான் தற்போது செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களை வெயிலில் நிறுத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது. கல்விக் கட்டணத் தொகையை வசூலிக்க மாணவர்களைத் தண்டிப்பது சட்டவிரோதமானது. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதனை மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசே! பள்ளிக் கல்வித்துறையே!

  • மாணவ, மாணவிகளை கடும் வெயிலில் நிறுத்தி துன்புறுத்திய செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடு! பள்ளி முதல்வரை கைது செய்! அப்பள்ளியின் உரிமத்தை ரத்து செய்! அரசுடமையாக்கு!
  • விதிமீறல் குறித்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு நடத்து!
  • விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளி நிர்வாகங்களின் உரிமத்தை ரத்து செய்! அரசுடமையாக்கு!


இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க