உடலும் அதிகாரமும்: ஈரான், பாகிஸ்தான் பெண்களின் புதிய குரல்
இஸ்லாமியப் பெண்கள் இரு முனைகளுக்கு நடுவே சிக்கியிருக்கிறார்கள். ஒரு பக்கம், "இஸ்லாமியப் பெண்களைக் காப்பாற்றுதல்" என்ற பெயரில் படையெடுப்புகளை நியாயப்படுத்தும் மேற்கத்திய ஏகாதிபத்தியம். மறு பக்கம், உள்ளிருந்து எழும் உரிமைக் குரலை "மேற்கிடம் சரணடைதல்" என்று முத்திரை குத்தும் உள்நாட்டு மதவாதிகள். மதத்தைப் பின்பற்றினால் மேற்கு ’பரிதாபப்படுகிறது’. உரிமை கேட்டால் உள்ளூர் ஆணாதிக்கம் தண்டிக்கிறது.







