09.09.2026

தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்த முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றம் – தமிழ்நாட்டின் விவசாயத்தை அழிக்கும் விஜய் அரசின் உண்மை முகம்!

பத்திரிகைச் செய்தி

‎நேற்று நடந்துமுடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில் 11 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு மக்கள் விரோத சட்ட முன்வடிவுகள் விஜய் அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று, தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்த முன்வடிவு ஆகும்.

‎மேற்கண்ட சட்டத்திருத்த முன்வடிவுக்கு எதிராக அ.தி.மு.க. ,சி.பி.எம்., சி.பி.ஐ., பா.ம.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்திவிட்டேன் என்று தன்னை விவசாயிகளின் காவலனாக அறிவித்துக் கொண்ட விஜய்யின் உண்மையான முகம் இந்தச் சட்ட முன்வடிவின் மூலம் கிழிந்து தொங்கியுள்ளது என்பது உண்மை.

‎மேற்கண்ட சட்டத்திருத்தத்தின் மூலம் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஆட்சியரின் முன் அனுமதியை பெறும் நடைமுறையை நீக்கவும்; நன்செய் நிலங்கள் தொடர்பான திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை, நகரமைப்பு இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலங்களின் மேல் இருந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

‎எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும் இனி நிலங்களைப் பெற்று நிறுவனம் தொடங்கி செயல்படுவதற்கு முன் அனுமதி பெற அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள நகரமைப்பு இயக்குநருக்கு மட்டுமே உரிமை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அழித்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே இந்தச் சட்டத்திருத்த முன்முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

‎ஆனால் இது தொடர்பான விவாதங்கள் எதுவும் இன்றி தமிழ்நாடு அமைதியாக இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். கவர்ச்சிவாதத்தால் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மைனாரிட்டி ஆட்சியில் இருக்கும் முதலமைச்சரான விஜய் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு விவசாயத்தை அழிக்கக்கூடிய திட்டத்தை நேரடியாகவே நடைமுறைப்படுத்தியுள்ளார். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்தச் சட்டத்திருத்த முன்வடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க