இந்திய ஐ.டி. துறை வேலைவாய்ப்பை அச்சுறுத்தும் ஏ.ஐ. வளர்ச்சி
தொழில்நுட்ப சேவைத்துறையில் இந்தியா பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால், இப்போது பெரிய மாற்றம் வரவிருக்கிறது. புதிய ஆள்சேர்ப்பு ஏற்கெனவே மந்தமடைந்துவிட்டது. இத்துறை தனது முதன்மையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், விரைவாகப் புதிய மாற்றங்களுக்குத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிறுவனங்களின் நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர்.
வெளிநாட்டு கார்ப்பரேட் கல்விக் கொள்ளைக்கு தமிழ்நாட்டை திறந்துவிட்ட விஜய்
வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் அனுமதிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கொள்கையை சீரழித்து, வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிப்பவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை உருவாக்கி, அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் மண்ணைப் போடுவதுதான் மோடி-அமித்ஷா பாசிச கும்பலின் திட்டம். அதை திறம்பபட செய்து முடிப்பவர்தான் விஜய்.
தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா பல்கலை: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை ரத்து செய்!
ஒரு தொழிலாளியின் மகனோ, விவசாயியின் மகளோ, சாதாரண உழைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவரோ ஆண்டுக்கு ரூ.15 லட்சம், ரூ.20 லட்சம் கட்டி இப்பல்கலைக்கழகங்களில் படிக்க முடியுமா? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு எட்டாத கல்வியை, உலகத் தரமான கல்வி என்ற பெயரில் பெருமையாக விளம்பரப்படுத்துகின்றனர்.
விளைவிப்பது விவசாயி; விலையைத் தீர்மானிப்பது யார்?
விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து வாழ விரும்புவதில்லை. அவர்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு, உற்பத்திச் செலவையும் குடும்ப வாழ்க்கையையும் சமாளிக்கும் விலை வேண்டும். பழைய கடனைத் தள்ளுபடி செய்வது உடனடி நிவாரணம்; புதிய கடன் உருவாகாமல் இருக்க விவசாயம் செய்து வாழக்கூடிய வருமானம் வேண்டும்; அதற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
யு.பி.ஐ. கட்டணம்: மோடி – கைதேர்ந்த அமெரிக்க அடிமை
இந்திய யு.பி.ஐ. பரிவர்த்தனைச் சந்தையில் ஏறக்குறைய 80 சதவிகிதப் பங்கை “ஃபோன்-பே”, “ஜி-பே” ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்களே கொண்டுள்ளன. ஆகவே, இந்திய மக்கள் - வணிகர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடப்பட உள்ளது. இதன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அமெரிக்க அடிமை என்பதை மோடி மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஓட்டுக்காகப் பித்தலாட்டம்! கஞ்சிக்கும் போலீசுத் தடை! சமயபுரத்தில் கொதிக்கும் விவசாயிகள்!
த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதியான முழு பயிர்க்கடன் தள்ளுபடியை நிறைவேற்றக் கோரி சமயபுரத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடக்கத்தில், போராட்டக்களத்தில் பந்தல் அமைப்பதையும் குடிநீர் ஏற்பாடு செய்வதையும் தடுத்த போலீசு, மூன்றாவது நாளில் விவசாயிகளுக்கு கஞ்சி காய்ச்ச கொண்டுவரப்பட்ட அரிசி, பருப்பை கூட உள்ளே கொண்டுசெல்ல விடாமல் தடுத்தது.
யு.பி.ஐ. கட்டணக் கொள்ளை | கேலிச்சித்திரங்கள்
யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (NPCI) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவிகிதம் கட்டணம் (MDR) வசூலிக்கப்படும்...
தூத்துக்குடியை நாசமாக்கும் புதிய அனல்மின் நிலையத் திட்டத்தை முறியடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலை பொறுத்தவரை நாடு என்றால் அம்பானி-அதானிதான்; அவர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. அதானி மட்டுமல்லாமல், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும் தூத்துக்குடியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது புதிய அனல் மின் நிலையத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவன் இல்லா கடற்கரைகள்…
கடற்கரை என்பது ஒரு வெற்று நிலப்பரப்பு அல்ல.
படகுகள் நிற்கும் இடம்.
வலைகள் உலரும் இடம்.
மீன்கள் விற்கப்படும் இடம்.
குழந்தைகள் கடலைக் கற்றுக்கொள்ளும் இடம்.
தலைமுறைகள் வாழ்வைக் கற்றுக்கொண்ட இடம்.
ஆனால், மூலதனம் ஒரு இடத்தைப் பார்க்கும் போது, அதன் சந்தை மதிப்பை மட்டுமே பார்க்கிறது.
காவிரியை முடக்கி டெல்டாவைப் பாலைவனமாக்கும் கார்ப்பரேட் சதி! | கண்டன ஆர்ப்பாட்டம்
“மேலே கேகேதாட்டு அணை! கீழே ஹைட்ரோகார்பன் திட்டம்! காவிரியை முடக்கி டெல்டாவைப் பாலைவனமாக்கும் கார்ப்பரேட் சதிகளை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரக் கழக திருவாரூர் மாவட்டக் குழு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாணவர் விரோத – தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம் | பு.மா.இ.மு. கண்டனம்
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 24 அன்றே முடிந்துவிட்ட நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளில் இச்சட்டத்திருத்தத்தை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது. இது, தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்க பாதை அமைத்துதரும் நடவடிக்கையாகும். உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் நடவடிக்கையும் ஆகும்.
நாமக்கல்: சிறுமியின் உயிரைப் பறித்த நாவல் ஆர்த்தோ தனியார் மருத்துவமனை!
சிறுமியின் மரணத்திற்கு பரமத்தி வேலூர் நாவல் ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் எனக் குற்றஞ்சாட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சிறுமியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தம்: விவசாயத்தை அழிக்கும் விஜய் அரசு!
இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலங்களின் மேல் இருந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அழித்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே இந்தச் சட்டத்திருத்த முன்முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம்: சட்டமன்றக் கூத்துகளின் பின்னணியில் கார்ப்பரேட் கொள்ளை!
2026-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்திருத்தம் 2018-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிவ நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும் என்று கூறப்படுவதன் மூலம் தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்கவே விஜய் அரசு இந்தச் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.
த.வெ.க. நூறு நாள் ஆட்சி: சாதனையல்ல, வேதனை! | தோழர் வெற்றிவேல்செழியன்
த.வெ.க. நூறு நாள் ஆட்சி: சாதனையல்ல, வேதனை! |
தோழர் வெற்றிவேல்செழியன்
https://youtu.be/GmbJwqIAYBQ
நன்றி: சமயம் செய்திகள்
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




















