‎

12.10.2026

டெல்லியில் சிந்தப்படும் இளைஞர்களின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் பதில் சொல்லியாக வேண்டும்!

பத்திரிகைச் செய்தி

‎“நாட்டின் தலைநகர் டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது” என்ற கேள்வி குடிமக்கள் ஒவ்வொருவரையும் உலுக்குகிறது. 12 ஆண்டுகளாக இந்த நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கிய மோடி-அமித்ஷா பாசிச கும்பலுக்கு எதிராக சிறு தீயாய் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் கடந்த இரு நாட்களாக உச்சத்தை எட்டி இருக்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் சட்டவிரோத செயல்பாடுகள் ஊடகங்கள் வாயிலாக அம்பலமானதையடுத்து, அவர் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராடி வருகின்றனர்.

‎இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பெரும் திரளாக வந்த இளைஞர்கள் வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். சமூக செயற்பாட்டாளரும் யூடியூப் பிரபலமுமான துருவ் ரத்தி அவரது வீட்டிலேயே கைது செய்யப்பட்டார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் அபிஜித் தீப்கே உள்ளிட்டவர்கள் விமானத்திலேயே கைது செய்யப்பட்டார்கள்.

‎மாணவர் தலைவர் நேஹா உள்ளிட்ட பலரும் போராட்டக் களத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறை படுத்தப்பட்டார்கள். எனினும் கூட மாணவர்கள் தொடர்ந்து டெல்லியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சுமார் 53,000 போலீசும் துணை ராணுவப் படையினரும் களத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்து மத வெறி பாசிச சக்திகள் போராடுகின்ற மாணவர்ககளையும் இளைஞர்களையும் களத்திலேயே தாக்குகின்றன.

‎இளைஞர்களின் போராட்டங்களை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அது மட்டுமன்றி பெண் ஊடகவியலாளர்கள் மோடி-அமித்ஷா பாசிச கும்பலின் போலீசால் திட்டமிட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

‎இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பதை நாடு முழுவதும் இளைஞர்கள் மக்கள் என அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

‎நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் பின்வாங்கியதைப் போல தற்பொழுது பின்வாங்க முடியாது என்று திமிர்த்தனமாக மோடி-அமித்ஷா பாசிச கும்பல் இருக்கிறது. இந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக பலமுறை உச்சநீதிமன்றம் சென்றும் எவ்விதப் பயனும் இல்லை.

‎உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கபில் சிபில், தனக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழந்து விட்டது என்கிறார். நாடு இன்னொரு எமர்ஜென்சியை விட மிக மோசமான பாசிச நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளதை நம்மால் உணர முடிகிறது.

‎டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. சாலைகள் எல்லாம் முள்வேலிக் கம்பிகளால் தடைப்படுத்தப்பட்டுள்ளன. இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. என்றாலும் கூட இளைஞர்களின் வருகை புது விடியலை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது. டெல்லியின் வீதிகள் எங்கும் இளைஞர்களின் இரத்தத் துளிகள் சிதறிக் கிடக்கின்றன. இளைஞர்களின் முழக்கங்கள் டெல்லி வீதியெங்கும் எதிரொலிக்கின்றன. விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு மோடி-அமித்ஷா பாசிச கும்பலுக்கு எதிராக இன்னொரு விடுதலைப் போராட்டத்தை மாணவர்களும் இளைஞர்களும் துவக்கி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை விஜய் அரசு மிகக் கடுமையாக ஒடுக்கியுள்ளது. இப்படிப்பட்ட விஜய்யோடு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைகுலுக்குகிறார், தேநீர் அருந்துகிறார். தமிழ்நாட்டிற்குள் நிம்மதியாக மோடியால் வந்து போக முடிகிறது என்றால் இதுதான் தமிழ்நாட்டிற்கு நேர்ந்த அவமானம் என்று மக்கள் அதிகாரக் கழகம் சுட்டிக்காட்டுவதுடன், இந்தப் போராட்டத்தை நாடு முழுவதும் விரிவடையச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

‎பாசிச மோடி-அமித்ஷா அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை ஒழித்துக்கட்டுவதற்கான போராட்டமாக வளர்த்தெடுப்போம்!

‎ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும் பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டத் தீ பற்றி எரியட்டும்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
கழகப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

‎

1 மறுமொழி

  1. பாசிச கும்பல் தற்போது தோல்வி முகத்தில் உள்ளது.அதனால்தான் தன்னுடைய பாசிச முகத்தை தீவிரமாக வெளிக்காட்டுகிறது. மேலும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் ஊடாக ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி -அதானி பாசிசம் உறுதியாக வீழ்த்தப்படும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க