அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
கடந்த ஆகஸ்ட் 25 அன்று மாலை திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே “மேலே கேகேதாட்டு அணை! கீழே ஹைட்ரோகார்பன் திட்டம்! காவிரியை முடக்கி டெல்டாவைப் பாலைவனமாக்கும் கார்ப்பரேட் சதிகளை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரக் கழக திருவாரூர் மாவட்டக் குழு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் ஆசாத் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் தோழர் சீமா மகேந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சீனி செல்வம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் விக்னேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட இணைச்செயலாளர் தோழர் லெனின், கழக மாவட்டக் குழு உறுப்பினர்களான தோழர் வாஞ்சிநாதன், தோழர் மோகன், தோழர் குமரகுரு,தோழர் முரளி,தோழர் ராஜ்குமார் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமாகக் கலந்துகொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
- பயிரிழப்புக்கு முழு இழப்பீடு வழங்கு!
- குத்தகை விவசாயிகளையும் நிவாரணத்தில் சேர்த்திடு!
- வேலை இழக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.30,000 நிவாரணம் வழக்கு!
- ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களைத் தூர்வாரி மீட்டெடு!
- விவசாயப் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்!
- டெல்டாவை ஆக்கிரமித்து வரும் உவர்நீர் ஊடுருவுவதைத் தடுத்திடு!
- 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.650 சம்பளம் வழங்கு!
இவண்
திருவாரூர் மாவட்டக் குழு,
மக்கள் அதிகாரக் கழகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





