Friday, November 6, 2026

ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரும் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.

‎வாக்குரிமை பறிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கான ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.; அம்பானி-அதானி பாசிசக் கும்பலின் சதி வேலையை முறியடிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்; இப்போராட்டத்தின் வழியாக மோடி-அமித்ஷா பாசிச கும்பலுக்கு எதிரான ஈட்டியாக தமிழ்நாடு செயல்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி நிலத்தை அபகரிக்கும் மத்திய அரசு

0
ஏற்கெனவே போதுமான நிலமில்லாத சூழலில், மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ.சி. மருத்துவ‌மனையின் விரிவாக்கத்திற்காக நிலத்தை எடுத்துக் கொண்டால், கல்லூரியின் நிலம்‌ மேலும் சுருங்குவதோடு கல்லூரிக்கான அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறும். இதற்கெதிராக மாணவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை: இளைஞர்கள் போராட்டத்தைக் கண்டு நடுங்கும் பாசிஸ்டுகள்!

பாசிஸ்டுகளின் கைக்கூலியும் தலைமை தேர்தல் ஆணையருமான ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, நாளை (அக்டோபர் 10) கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் ஏ.ஐ.எஸ்.ஏ. (AISA) உள்ளிட்ட பல்வேறு மாணவர்-இளைஞர் அமைப்புகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் டெல்லியில் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக டெல்லியை திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியுள்ளது, பாசிசக் கும்பல்.

இந்துராஷ்டிரத் தேர்தல் ஆணையம்!

இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை இந்துராஷ்டிரப் பாதையை செப்பனிடுவதற்கான கருவிகளாக உருமாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா பல்கலை: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை ரத்து செய்!

0
ஒரு தொழிலாளியின் மகனோ, விவசாயியின் மகளோ, சாதாரண உழைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவரோ ஆண்டுக்கு ரூ.15 லட்சம், ரூ.20 லட்சம் கட்டி இப்பல்கலைக்கழகங்களில் படிக்க முடியுமா? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு எட்டாத கல்வியை, உலகத் தரமான கல்வி என்ற பெயரில் பெருமையாக விளம்பரப்படுத்துகின்றனர்.

நாங்கள் பெண்கள், சுதந்திரமானவர்கள் – தலைநகரை உலுக்கும் மாணவிகளின் எழுச்சிமிகு போராட்டம்

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமியை மூன்று பாலியல் பொறுக்கிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்திற்கு பிறகு மாணவிகளின் போராட்டம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டுமின்றி, பாலியல் குற்றங்கள் நடந்த பின்னர் மாணவிகள், பெண்கள் மீது சமூகத்தால் திணிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் எதிர்த்தும் மாணவிகள் குரலெழுப்பினர்.

கார்கேவின் பேச்சு புறக்கணிக்கப்படுவது ஏன்?

“அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும்” என்று கார்கே கூறும்போது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல காங்கிரசு ஆளும் மாநிலச் சட்டமன்றங்களும்தானே அதில் அடங்கும்?. அப்படியானால் இந்தக் கலைப்புப் பட்டியலில் இருந்து விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மட்டும் எப்படி வெளியே நிற்க முடியும்? இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரசுதான்.

டெல்லி – சத்யா நிகேதன் விடுதிக் கட்டட விபத்து: போராடியவர்களைக் கொடூரமாகத் தாக்கிய பா.ஜ.க. அரசு!

0
போலீசாரால் போராட்டக்காரர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுயாதீனப் பத்திரிகையாளர் பக்சீஷும் ஒருவர். அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களின் செல்பேசிகள் பறிக்கப்பட்டு அதன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடுமையாகத் தாக்கப்பட்டு, மூன்று மணிநேரத்திற்குப் பின்னர் போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நவ. 1: மக்களின் குடிநீர் ஆதாரத்தைத் தனியார்மயமாக்காதே! | கோவை அரங்கக் கூட்டம்

நவம்பர் 1 – தமிழ்நாடு நாளை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன் அங்கமாக நவம்பர் 1 அன்று கோவையில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. *** நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கும் அம்பானி-அதானிகளுக்கும் தமிழ்நாட்டை தாரைவார்க்காதே! கோவை அரங்கக் கூட்டம் | நவம்பர் 01, 2026   *** ...

நவ. 1 – தமிழ்நாடு நாள்: மதுரையில் பொதுக்கூட்டம் | அக்டோபர் 31

தேதி: அக்டோபர் 31 | நேரம்: மாலை 5 மணி | இடம்: மந்தைத்திடல், அவனியாபுரம், மதுரை.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கும் அம்பானி-அதானிகளுக்கும் புதுச்சேரியைத் தாரைவார்க்காதே! | நவம்பர் 01, 2026 | அரங்கக் கூட்டம்

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கும் அம்பானி-அதானிகளுக்கும் புதுச்சேரியைத் தாரைவார்க்காதே! நவம்பர் 01, 2026 | அரங்கக் கூட்டம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நவம்பர் 1, 1954: பிரெஞ்சுக் காலணிய நிர்வாகத்திலிருந்து புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை விடுபட்ட நாள்! ஆனால், 72 ஆண்டுகள் ஆகியும் இன்னும் புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் 16 முறை தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பினும், புதுச்சேரிக்கு இன்னும் மாநில உரிமை வழங்கப்படவில்லை. இன்று நாடு எதிர்கொள்ளும் ஆபத்து ஒருபுறம், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. முன்வைக்கும் “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு” என்ற இந்துராஷ்டிர பாசிச அரசியல். மறுபுறம், நாட்டின்...

ஆறு வயதுக் குழந்தையைக் கண்டு அஞ்சும் பாசிஸ்டுகளின் ஆட்சி! இனியும் நீடிக்க அருகதை உண்டா?

ஆதித்யாவின் பேச்சு இவ்வளவு கூர்மையாக இருக்கிறது. “ஏழைகளுக்கு மரியாதை இல்லை”, “படித்ததால்தான் கேள்வி கேட்கிறேன்”, “இந்தப் போராட்டம் அனைவருக்கும் சொந்தமானது” என்ற அவனது வார்த்தைகள் ஒரு குழந்தையின் வீர வசனங்கள் மட்டுமல்ல; பாசிச கும்பல் கட்டி வைத்திருக்கும் அதிகாரக் கோட்டையின் மீதான பழைய அச்சம் உடையத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள்.

யு.பி.ஐ. கட்டணம்: மோடி – கைதேர்ந்த அமெரிக்க அடிமை

0
இந்திய யு.பி.ஐ. பரிவர்த்தனைச் சந்தையில் ஏறக்குறைய 80 சதவிகிதப் பங்கை “ஃபோன்-பே”, “ஜி-பே” ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்களே கொண்டுள்ளன. ஆகவே, இந்திய மக்கள் - வணிகர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடப்பட உள்ளது. இதன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அமெரிக்க அடிமை என்பதை மோடி மீண்டும் நிரூபித்துள்ளார்.

அண்மை பதிவுகள்