தமிழ்ச்சுடர்
கடன் தள்ளுபடி ஒரு தொடக்கமே… கார்ப்பரேட் ஆதிக்கத்தை வீழ்த்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்!
கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் கூட அடுத்த சில பருவங்களிலேயே விவசாயி மீண்டும் அதே கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் நீடிக்கவே செய்கிறது. விவசாயிகளை மீண்டும் மீண்டும் கடனாளியாக்கும் இந்த நச்சுப் பொருளாதார சூழலையே முழுமையாக மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.
போராடினால் கைது, வாய்ப்பூட்டு! இதுதான் மோடி கும்பலின் ‘நீதி’!
டெல்லியில் போராடச் சென்ற சி.ஜே.பி. அமைப்பின் இளம் தலைவர்களான அபிஜீத் தீப்கே, சௌரப் தாஸ், அஷுதோஷ் ராங்கா ஆகியோருக்குத்தான் இந்த நிலை. டெல்லி கன்டோன்மென்ட் சிறப்பு நிர்வாக நடுவர்முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்குத் தலா ரூ.50,000 பிணைப்பத்திரமும், ஓராண்டு ‘பொது அமைதி’யைப் பேணும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தியும் விஜய்யும் ஜனநாயகக் காவலர்களா?
டெல்லியில் மோடியின் அடக்குமுறை! சென்னையில் விஜய்யின் போலீசு! பெங்களூருவில் காங்கிரசின் போலீசு! ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரும் போராட்டத்தை ஒடுக்கும் இவர்கள்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறார்களாம்!
விஜய்யின் கூலிங்கிளாசும் கருகும் சம்பாவும்: டெல்டாவை நடுத்தெருவில் வீசிய 45 நாள் நாடகம்!
காவிரி விவசாயிகள், விஜய்யிடம் புகைப்படமோ ரீல்ஸ்களோ கேட்கவில்லை; வரவேற்பு கேட்கவில்லை; கண்ணாடி கேட்கவில்லை. குறுவைக்குத் தண்ணீர் கேட்டார்கள்; அது கிடைக்கவில்லை. சம்பாவுக்காவது கொடு என்றார்கள்; 45 நாட்கள் போதாது என்றார்கள்; கடைமடை வரை கொண்டு வா என்றார்கள்; பயிரைக் காப்பாற்று என்றார்கள். இப்போது பயிர் காய்ந்தால் நிவாரணமாவது கொடு என்கிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் ஓர் அரசின் பதில் “மேட்டூர் அணையைத் திறந்துவிட்டோம்” என்பதாக இருக்க முடியுமென்றால், இதைவிட சைக்கோத்தனம் வேறேதும் இருக்க முடியாது.
கார்கேவின் பேச்சு புறக்கணிக்கப்படுவது ஏன்?
“அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும்” என்று கார்கே கூறும்போது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல காங்கிரசு ஆளும் மாநிலச் சட்டமன்றங்களும்தானே அதில் அடங்கும்?. அப்படியானால் இந்தக் கலைப்புப் பட்டியலில் இருந்து விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மட்டும் எப்படி வெளியே நிற்க முடியும்? இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரசுதான்.
சேவைத்துறை நிதியை வெட்டாதே – பிரான்சை உலுக்கும் போராட்டங்கள்
பள்ளியில் ஏன் ஆசிரியர் இல்லை, நாற்காலி இல்லை என்ற இடத்தில் தொடங்கிய கேள்வி, இறுதியில் அரசின் பணம் எங்கே செல்கிறது என்ற கேள்வியாக மாறியுள்ளது. மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர், தீயணைப்பு வீரர் ஆகியோரின் தனித்தனி கோரிக்கைகளை ஒன்றாக இணைக்கும் அடிப்படை முரண்பாடும் இதுதான். பிரான்ஸ் முழுவதும் பற்றியெரியக் காரணமும் இதுதான்.
உடனடிக் கோரிக்கைகள் – வெறும் சலுகை அல்ல, வாழ்வாதார உரிமை!
கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் நிவாரணத் தீர்ப்பாயம், புதிய பயிர்க்கடன், உரிய விலை, கொள்முதல், பயிரிழப்பு நிவாரணம், காப்பீடு, பாசனம் ஆகியவை தனித்தனி கோரிக்கைகள் அல்ல. இவை அனைத்தும் ஒன்றைத்தான் சொல்கின்றன: ஏற்கெனவே ஏற்பட்ட நட்டத்தையும், இந்தப் பருவத்தின் அபாயத்தையும் முழுவதுமாக விவசாயக் குடும்பத்தின் தலையில் கட்டிவிட்டு அரசு தப்பித்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் அது.
விவசாயத்தின் நட்டத்தை யார் சுமக்கிறார்கள்?
கடனை உருவாக்கும் பொருளாதார நிலைமைகளை அப்படியே வைத்துக்கொண்டு, பழைய கடனை மட்டும் தள்ளுபடி செய்தால் புதிய கடன் மீண்டும் உருவாகும். அதனால்தான் கடன் தள்ளுபடியுடன் சேர்த்து கட்டுப்படியாகும் விலை, பொதுப்பாசனம், போதுமான வங்கி மற்றும் கூட்டுறவுக் கடன், பயனுள்ள பயிர்க் காப்பீடு, அரசுக் கொள்முதல், உற்பத்திச் செலவுக் கட்டுப்பாடு ஆகியவற்றையும் இணைக்க வேண்டும் என்கிறோம்.
விவசாயியின் கடனாக மாறும் நீர் நெருக்கடி!
ஆறுகளில் தண்ணீர் வரவில்லை; வந்தாலும் கால்வாயில் போதிய தண்ணீர் இல்லை; ஏரி நிரம்பவில்லை. விவசாயி ஆழ்துளைக் கிணறு அமைக்கிறார். அது வற்றினால் மேலும் ஆழமாகத் தோண்டுகிறார். கிணறு தோல்வியடைந்தால் இன்னொரு கிணறு அமைக்கிறார். இதற்கெல்லாம் கடன் வாங்குகிறார். பிறகு “விவசாயிக்கு ஏன் இவ்வளவு கடன்?” என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நடுவில் நிற்பது யார்?
விவசாயிகள் தங்கள் பொருளை ஒன்றாகத் திரட்டி அவர்களே கட்டுப்படுத்தும் அமைப்புகள் வழியாக கூட்டாக விலை பேச வேண்டும். பொதுக் கிடங்குகள், குளிர்பதன வசதிகள், கூட்டுறவு பதப்படுத்தும் ஆலைகள் வேண்டும். போதுமான கடன் கிடைக்க வேண்டும். முழு உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்ட நியாயமான விலை வேண்டும். அந்த விலையில் வாங்கும் அரசுக் கொள்முதல் அமைப்பும் விரிவடைய வேண்டும்.
விளைவிப்பது விவசாயி; விலையைத் தீர்மானிப்பது யார்?
விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து வாழ விரும்புவதில்லை. அவர்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு, உற்பத்திச் செலவையும் குடும்ப வாழ்க்கையையும் சமாளிக்கும் விலை வேண்டும். பழைய கடனைத் தள்ளுபடி செய்வது உடனடி நிவாரணம்; புதிய கடன் உருவாகாமல் இருக்க விவசாயம் செய்து வாழக்கூடிய வருமானம் வேண்டும்; அதற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
பயிர்க்கடன் தள்ளுபடி ஏன் அவசியம்?
விதைப்பதற்கு முன்பே செலவு செய்து அறுவடைக்குப் பிறகுதான் வருமானம் பெறும் விவசாயத்தில் அடுத்த பருவத்திற்குப் புதிய கடன் தேவைப்படுவது இன்றைய நிலையில் தவிர்க்க இயலாததாகும். எனவே, கடந்த பருவங்களின் நட்டத்தால் அடைக்க முடியாமல் தேங்கியுள்ள பழைய கடன் சுமையை அகற்றினால் மட்டுமே, அடுத்த பருவத்தைப் பழைய பாக்கியின்றி தொடங்க முடியும்.
ஓட்டுக்காகப் பித்தலாட்டம்! கஞ்சிக்கும் போலீசுத் தடை! சமயபுரத்தில் கொதிக்கும் விவசாயிகள்!
த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதியான முழு பயிர்க்கடன் தள்ளுபடியை நிறைவேற்றக் கோரி சமயபுரத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடக்கத்தில், போராட்டக்களத்தில் பந்தல் அமைப்பதையும் குடிநீர் ஏற்பாடு செய்வதையும் தடுத்த போலீசு, மூன்றாவது நாளில் விவசாயிகளுக்கு கஞ்சி காய்ச்ச கொண்டுவரப்பட்ட அரிசி, பருப்பை கூட உள்ளே கொண்டுசெல்ல விடாமல் தடுத்தது.
‘திமாகி நக்சல்’: மோடியின் ‘மூளை வேட்டை’யும், சிதம்பரத்தின் நக்சல் வேடமும்!
இத்தலைமுறை “உன் ஆட்சியில் என்ன செய்தாய்?” என்று கேட்கத் தொடங்கியுள்ளது. இக்கேள்விதான் மோடிக்கும் ஆபத்து; சிதம்பரத்துக்கும் ஆபத்து. அதனால்தான் ஒருவர் இந்த எழுச்சிக்குள் “திமாகி நக்சல்” என்ற பெயரில் எதிரியை உருவாக்க முயல்கிறார்; இன்னொருவர் அதே பெயரைத் தனது நெற்றியில் ஒட்டிக்கொண்டு எழுச்சியின் பக்கம் நிற்பவரைப் போல வேடமிடுகிறார்.
நம் சிந்தனையை வடிவமைக்கும் கார்ப்பரேட்டுகள் – அல்காரிதத்துக்குக் கடிவாளம் போடும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்ட முன்வரைவு முழுமையான தீர்வு அல்ல. அது இன்னும் கருத்துக் கேட்பு நிலையில்தான் உள்ளது. சட்டமாக நிறைவேற்றப்பட்டாலும் பெருநிறுவனங்கள் அதை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். ஆனால் அது குறைந்தபட்சமாக ஒரு சரியான திசையைச் சுட்டுகிறது.















