Friday, November 6, 2026

சூழலியல்

உலகமய காலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. முதலாளித்துவம் உருவாக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாக சூழலியல் பிரச்சினைகளும் உலகில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

சென்னையில் வேகமாகச் சரியும் நிலத்தடி நீர்மட்டம்

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 ஜூலையில் 14.38 அடி ஆழத்திலிருந்த நிலத்தடி நீர், 2026 ஜூலையில் 20.87 அடிக்குச் சென்றுவிட்டது. எல்நினோ, வெப்ப அலை போன்றவை நிலைமையை மோசமாக்கினாலும், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைப் பாதுகாப்பு, நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவற்றில் அரசுகளின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு: வேலையிழந்து தவிக்கும் விவசாயிகள்

இம்மாவட்டங்களில் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுவரும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் முற்றிலும் வேலை இழந்துள்ளனர். மாதத்தில் 20 நாட்களாவது விவசாயக் கூலி வேலைகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் சில வாரங்கள் மட்டுமே விவசாய வேலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மதுரை கல்குவாரி – வண்ணாத்திகரடு மலையை காப்பாரா அமைச்சர் பிரபு?

கொண்டையம்பட்டி வண்ணாத்திகரடு மலையில் 2021 முதல் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும், சுமார் 35 மீட்டர் உயரம் கொண்டிருந்த அம்மலையின் 5 ஏக்கர் பகுதி வெட்டப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலையின் நான்கு புறங்களிலும் 5 கல்குவாரிகள் தற்போதும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தூத்துக்குடியை நாசமாக்கும் புதிய அனல்மின் நிலையத் திட்டத்தை முறியடிப்போம்!

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலை பொறுத்தவரை நாடு  என்றால் அம்பானி-அதானிதான்; அவர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. அதானி மட்டுமல்லாமல், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும் தூத்துக்குடியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது புதிய அனல் மின் நிலையத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கல்குவாரியை மூடக்கோரி சுடுகாட்டில் மக்கள் போராட்டம்

கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த செப்டம்பர் 5 அன்று பொதுமக்கள் கல்குவாரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே பகுதியில் உள்ள சுடுகாட்டின் நடுவே பந்தல் அமைத்து, அங்கேயே மதிய உணவை சமைத்து சாப்பிட்டு, கைகுழந்தைகளுடன் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய அனல்மின் நிலையம்: தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் த.வெ.க. அரசு

புதிய அனல்மின் நிலையம்: தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் த.வெ.க. அரசு https://youtu.be/8HOpF6DNGmU?si=4UioIoIcKe9zhGSP நன்றி: பூவுலகு காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

நேபாள பெருவெள்ளம்: இயற்கையின் சீற்றமா? முதலாளித்துவத்தின் கொடூரமா?

காலநிலை மாற்றத்தை உருவாக்குவதில் பங்களித்த வளர்ந்த நாடுகளும் சமூகங்களும், அதன் பாதிப்புகளை ஒரே அளவில் சந்திப்பதில்லை. இவ்வாறு வளர்ந்த நாடுகளால் உருவான பேரழிவால் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்களே பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர்.

ஆப்பிரிக்கா: கடும் வெயிலால் உயிரிழக்கும் ஒட்டகங்கள்

காலநிலை மாற்றத்தின் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. ஆப்பிரிக்காவில் வறட்சி, தீவிர வெப்ப அலை, மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போகுதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாகக் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

தேனி வருசநாடு: வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கடமலைக் குண்டு மக்கள்

வருசநாடு முதல் கடமலைக்குண்டு வரை ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் பகுதியில் 4,011 குடும்பங்களை வெளியேற்றுவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கென் பெத்வா: மோடி அரசைப் பணிய வைத்த இன்னொரு போராட்டம்!

மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இத்திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.

அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!

0
மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பா.ஜ.க. அரசு நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் 430 சதவீதம் அளவிலான கனமழையால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று இயற்கை மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு என்று வரையறுத்துள்ளது.

நாமக்கல்: ‘காப்புக்காடு’ என்ற பெயரில் பறிக்கப்படும் நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களின் நில உரிமை

​கடும் வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் பட்டா இல்லாததால் நிலத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!

ஏசி அறைகளோ, ஊதியத்துடன் கூடிய விடுப்போ இல்லாத இந்த முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் மீதுதான், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையும் ஈவுஇரக்கமின்றித் திணிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் விலையாகக் கொடுத்தே இந்த அதீத வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

ஏலகிரி: அரசின் துணையுடன் முறைகேடாக விற்கப்படும் பழங்குடியினர் நிலங்கள்

நிலங்கள் பெரிய அளவில் (செண்ட் கணக்கில்) பெரும் பணம் படைத்த வெளியாட்களுக்கும், சுற்றுலா நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதால், நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்ளூர் மலைவாழ் மக்களாலேயே நிலங்களை வாங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.

லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்

தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.

அண்மை பதிவுகள்