தூத்துக்குடியை நாசமாக்கும் புதிய அனல்மின் நிலையத் திட்டத்தை முறியடிப்போம்!

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலை பொறுத்தவரை நாடு  என்றால் அம்பானி-அதானிதான்; அவர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. அதானி மட்டுமல்லாமல், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும் தூத்துக்குடியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது புதிய அனல் மின் நிலையத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய “சூப்பர் கிரிட்டிக்கல்” அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர்  விஜய் ஆகஸ்ட் 31 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110-இன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இத்திட்டத்தின்படி, தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் புதிய மின் உற்பத்தி அலகுகள் நிறுவப்பட உள்ளன.; இதன்படி, 1979 முதல் இயங்கி வரும் சுற்றுச்சூழல் விதிமீறல் கொண்ட 5 பழைய அலகுகள் படிப்படியாக முழுமையாக நிறுத்தப்படும; அதற்குப் பதிலாக, அதே வளாகத்தில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அதிநவீன “சூப்பர் கிரிட்டிக்கல்” அலகுகள் நிறுவப்பட்டு, மொத்தம் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனல்மின் நிலையங்கள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில், மேலும் ஒரு அனல்மின் நிலையம் திறக்கப்படும் என்கிற அறிவிப்பு எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.

அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்ப புதிய கட்டுமானங்களை உருவாக்க வேண்டும் என்று இதற்கு காரணம் கூறலாம். ஆனால் அது நிலம், நீர், விவசாயம், மீன்வளம், கடல்வளம், சுற்றுச்சூழல் அனைத்தையும் நாசப்படுத்தி, மனிதர்களின் வாழ்விடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்த வைத்து அகதிகளாக்குகிறது. மக்களை நாசப்படுத்தி துரத்தியடித்துவிட்டு, யாருக்கு மின்சாரம், யாருக்கான வளர்ச்சி?

சான்றாக, உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்காகக் கல்லாமொழி கடற்கரைப் பகுதியில் கடலுக்கு நடுவே நீளமான பாலம் மற்றும் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. நிலக்கரியைக் கொண்டு வருவதற்கான இக்கட்டுமானங்களால் கடலின் நீரோட்டமும், மீன்களின் வரத்தும் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர். எனினும், அந்த எதிர்ப்புகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு அங்கே அனல்மின் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிலக்கரி சாம்பல்கள், நச்சு வாயுக்கள் கலந்த காற்றை சுவாசிப்பதால் சுற்றுவட்டார மக்கள் ஆஸ்துமா, நுரையீரல், இதயக் கோளாறு உள்ளிட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாவது; நிலக்கரி சாம்பல்கள் விவசாய நிலத்தில் படிவதால் பயிர்கள் பாதிக்கப்படுவது, உப்பளங்களில் படிந்து உப்பின் தரத்தைக் கெடுப்பது; அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் 40°C முதல் 44°C வரை அதிக வெப்பம் கொண்ட சுடுநீர் நேரடியாகத் கடலில் கலப்பதால் மீன் வளம், பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் முற்றிலும் அழியும் அபாயம்; அனல்மின் நிலைய இரசாயனங்களால் நீர், நிலம் நஞ்சாகும் அபாயம் ஆகியவற்றை அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் இன்றளவும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

இவ்வளவையும் ஏற்றுக்கொண்டு தங்கள் இன்னுயிரையும் வாழ்வாதாரத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு ‘தியாகம்’ செய்யச் சொல்கிறது மத்திய, மாநில அரசுகள்.


படிக்க: புதிய அனல்மின் நிலையம்: தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் த.வெ.க. அரசு


ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலை பொறுத்தவரை நாடு  என்றால் அம்பானி-அதானிதான்; அவர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. அதானி மட்டுமல்லாமல், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும் தூத்துக்குடியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது புதிய அனல் மின் நிலையத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படைலிடுவதில் அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க. ஆகிய எந்தக் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பதே நிதர்சனமாகும். முந்தைய தி.மு.க. அரசு 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு என்று திட்டத்தோடு செயல்பட்டது. அதையே 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் இலக்கோடு த.வெ.க. அரசு தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசு ஏற்றுக்கொண்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக இங்கு நடக்கும் கார்ப்பரேட் கொள்ளையினை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இக்கொள்கைகளை முறியடிக்கும் போராட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டு களமிறங்கும்போது மட்டுமே, கார்ப்பரேட் கொள்ளைகளை தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்கள், மனித உயிர்கள் பலியாகாமல் நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

மேலும், மக்கள் எழுச்சியின் மூலம் வேதாந்தாவின் நாசகர ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியதைப் போல, இந்த அனல்மின் நிலையத் திட்டத்தையும் முறியடிப்போம். அதற்காக, உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து களமிறங்குவோம்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க